கம்பராமாயணம் 6241 · யுத்த 3.11

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மண்தலம் தருகதிரவன் - நிலவுலகத்து உயிரினங்களைத் தனது ஒளியால் காக்கும் சூரியன்; வந்து போய் மறையும் - உதித்து, சென்று மறைகின்ற; எண்தலம் தொடற்கு அரியன - எண்ணுதற்குரிய மனத்தாலும் தீண்டுதற்கு இயலாதனவான; தடவரை இரண்டும் - விசாலமான மலைகளான உதயகிரி அத்தமன கிரி என்னு மிரண்டும்; கண் தலம் பசும் பொன்னவன் - பசிய பொன் போன்ற கண்களை உடைய இரணியாட்சனது; முன்னவன் - முன்னோனாகிய இரணியனுடைய; காதில் குண்டலங்கள் - காதிலணியும் காதணிகளாம்; இனிப் பெரு விறல் கூறல் - என்றால் அவனுடைய சிறந்த வீரத்தை எடுத்துக் கூறுவதற்கு; மற்று என் - வேறு என்ன வேண்டியுள்ளது?

தருகதிரவன் - ஒளியினால் காக்கும் சூரியன். எண்தலம் - எண்ணுதற்குக் கருவியாகிய மனம். இரண்யம் - பொன். அக்ஷம் - கண், பொற்கணான் - இரண்யாட்சன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The two great mountains that the Sun, who sustains the earth, comes over and goes behind,
  2. which even thought cannot reach:
  3. they are the earrings in the ears of the elder brother of the one with eyes of fresh gold;
  4. what need to speak further of his great valour?

What the poem says

The mountains of sunrise and sunset, too vast even to imagine, serve Iraṇiyaṉ as earrings. He is identified as the elder brother of Hiraṇyākṣa, whose name means golden-eyed, as the commentary explains from the Sanskrit.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maṇṭalam taru katiravaṉ vantu pōy maṟaiyum
eṇtalam toṭaṟku ariyaṉa taṭa varai iraṇṭum,
kaṇtalam pacumpoṉṉavaṉ muṉṉavaṉ kātil
kuṇṭalaṅkaḷ; maṟṟu eṉ, iṉip peru viṟal kūṟal?