கம்பராமாயணம் 6242 · யுத்த 3.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மருக் கொள் தாமரை நான்முகன் - மணம் கமழும் தாமரை மலரில் அமர்ந்திருக்கும் பிரமனும், ஐம்முகன் முதலோர் - ஐந்து முகங்களை உடைய சிவனும் முதலானோர்; குருக்களோடு - தேவ குருவான பிரகஸ்பதியுடனே; கற்று ஓதுவது அவன் பெருங் கொற்றம் - நாளும் படித்தறிந்து துதிப்பது அவனுடைய வெற்றிச் செயல்களையே; சுருக்கு இல் நான்மறை - சுருங்குதலில்லாத (விரிந்த) நான்கு வேதங்களிலும்; தொன்று தொட்டு உயிர் தொறும் - மிகப் பழங்காலமுதலே எல்லா உயிர்கள் தோறும்; தோன்றாது இருக்கும் தெய்வமும் - மறைந்து இருக்கின்ற தெய்வமும் கூட; 'இரணியனே நம' என்னும் - இரணியனே நம என்று போற்றும்.
மரு - நறுமணம். தாமரை - திருமாலின் நாபியாகிய தாமரை என்றுமாம். ஐம்முகன் - ஐந்து முகங்களை உடைய சிவபிரான். குருக்கள் - தேவகுரு. வேதங்களிலும் மற்றுள்ள உயிர்களிடமும் தொன்று தொட்டுத் தோன்றாது உறையும் தெய்வமும் இரணியனுக்கு அஞ்சி, அவனைப் புகழ்ந்து துதிக்கும் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The four-faced one on the fragrant lotus, the five-faced one and the others,
- with their preceptors, learn and recite his great victories;
- in the four unabridged Vedas, the god who from the beginning
- dwells unseen within every living being says, Homage to Iraṇiyaṉ!
What the poem says
Brahmā and Śiva, together with the gods' teacher Bṛhaspati, study and chant Iraṇiyaṉ's exploits. Even the hidden god of the Vedas, who lives unseen in every creature, is said to bow to him with "Homage to Iraṇiyaṉ", a parody of the sacred formula of homage to Nārāyaṇa.