கம்பராமாயணம் 6243 · யுத்த 3.13

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மயரும், மன் நெடுஞ் சேவடி மண் இடை வைப்பின்;
அயரும், வாள் எயிற்று ஆயிரம் பணம் தலை அநந்தன்;
உயருமேல், அண்ட முகடு தன்முடி உற உயரும்;
பெயருமேல், நெடும் பூதங்கள் ஐந்தொடும் பெயரும்.

பொருள் · Meaning in Tamil

மயர்வு இல் மன்- எதனாலும் மனம் சோர்வுறாத மன்னனாகிய இரணியன்; நெடுஞ்சேவடி - தனது நீண்ட பெரிய பாதங்களை; மண்ணிடைவைப்பின் - தரையிலே வைப்பானாயின்; ஆயிரம் நனந்தலை அனந்தன் - ஆயிரம் படங்களைக் கொண்ட (பூமியைத்தாங்கும்) ஆதிசேடன்; அயரும்- (பாதங்களின் கனம் தாங்காது) தளர்வான்; உயருமேல் - (அந்த இரணியன்) எழுந்து நிற்பானாயின்; அண்டமுகடு தன் முடி உற உயரும் - அண்டத்தின் மேல் முகடு தனது தலையில் பொருந்த உயர்வான்; பெயரு மேல் - அவன், இடத்தை விட்டு அசைவானாயின்; நெடும் பூதங்கள் - பெரியனவான பூதங்கள்; ஐந்தொடு பெயரும் - ஐந்தினோடும் பெயர்வான்.

மயர்வு - சோர்வு. நனந்தலை - பணாமுடி (படம்). வாள் - கூர்மை (ஒளியுமாம்).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If that tireless king set his long red feet upon the ground,
  2. Aṉantaṉ of the thousand broad hoods with gleaming fangs would grow faint;
  3. if he rose, he would rise till the dome of the universe touched his crown;
  4. if he moved, he would move along with the five great elements.

What the poem says

Iraṇiyaṉ's sheer size and weight: Aṉantaṉ, the thousand-headed serpent who holds up the earth, buckles when he steps down; when he stands his head touches the roof of the universe; when he moves the five elements move with him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'mayarvu il, maṉ neṭuñ cēvaṭi maṇṇiṭai vaippiṉ;
ayarum, vāḷ eyiṟṟu āyira naṉan talai aṉantaṉ;
uyarumēl, aṇṭa mukaṭu taṉ muṭi uṟa uyarum;
peyarumēl, neṭum pūtaṅkaḷ aintoṭum peyarum.