கம்பராமாயணம் 6244 · யுத்த 3.14

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பெண்ணின், பேர் எழில் ஆணினின், அலியினின், பிறிதின்,
உள் நிற்கும் உயிர் உள்ளதின், இல்லதின், உலவான்;
கண்ணின் காண்பன, கருதுவ, யாவினும் கழியான்;
மண்ணின் சாகிலன், வானினும் சாகிலன்; வரத்தால்.

பொருள் · Meaning in Tamil

வரத்தால் - இரணியன் தான் பெற்ற வரத்தின் வலிமையால்; பெண்ணில் பேரெழில் ஆணினில் - பெண்களாலோ, பேரழகு படைத்த ஆண்களாலோ; அலியினில் - இவையிரண்டுமல்லாத அலியினாலோ; பிறிதும் உள்நிற்கும் - வேறு, உலகத்தில் நிலை பெற்றுள்ள; உயிர் உள்ளதில் இல்லதில் - உயிருள்ளவைகளாலோ, உயிர் இல்லாதவைகளாலோ; உலவான் - சாகமாட்டான்; கண்ணில் காண்பன - கண்ணால் காணப்படுவனவாலும்; கருதுவ - எண்ணத்தில் நினைக்கப்படுவனவற்றாலும்; யாவினும் கழியான் - இவை எவற்றாலும் அழியமாட்டான்; மண்ணில் சாகிலன் - நிலத்திலும் சாகமாட்டான்; வானிலும் சாகிலன் - விண்ணிலும் சாகமாட்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. By woman, by man of great beauty, by one who is neither, or by any other
  2. living thing that dwells in the world, by what has life or what has none, he would not die;
  3. by nothing the eye can see or the mind conceive would he perish;
  4. he would not die on earth, nor in the sky: such was his boon.

What the poem says

Here is the famous boon of Iraṇiyaṉ. He could not be killed by any man, woman or being of any kind, living or lifeless, seen or imagined, and neither on earth nor in the sky. The story will show how Viṣṇu found a way through these conditions.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'peṇṇil, pēr eḻil āṇiṉil, aliyiṉil, piṟitum,
uḷ niṟkum uyir uḷḷatil, illatil, ulavāṉ;
kaṇṇil kāṇpaṉa, karutuva, yāviṉum kaḻiyāṉ;
maṇṇil cākilaṉ, vāṉilum cākilaṉ; varattāl.