கம்பராமாயணம் 6245 · யுத்த 3.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அனையான் - அந்த இரணியன்; தேவர் ஆயினர் ஏவரும் - தேவர்கள் எவரும், திரிதரும் இயக்கர் யாவரேயும் - நடமாடித் திரியும் இயக்கர் எவரும் பிறரால்; மற்று எண்ணவும் நினைக்கவும் இயன்ற - மற்றும் தியானிக்கவும் துதிக்கவும் முடிந்தவர்களான; கோவை மால் அயன், மான்இடன் - திரிமூர்த்திகள் என்ற வரிசையிலுள்ள மால், பிரமன் உமையாகிய பெண்ணை இடப்புறம் கொண்டுள்ள சிவன்; யாவரும் கொல்ல ஆவி தீர்கிலன் - ஆகிய எவரும் கொல்ல உயிர்நீங்கான்; ஆற்றலும் தீர்கிலன் - வலிமையும் நீங்கமாட்டான்;
'எண்ணவும், நினைக்கவுமே இயன்றவர் என்பதால் கண்களுக்குப் புலனாகாதவர் என்பது கருத்து. கோவை - வரிசை நிரல். மான் - இடன்; மானை இடக்கையில் தரித்தவன் எனலும் ஆம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- All who are gods, all the yakṣas who roam about,
- and the ordered three who alone can be contemplated and conceived,
- Māl, Ayaṉ and the one with the doe at his left: even if all of them sought to kill him,
- his life would not end, nor would his strength fail; such was he.
What the poem says
Not even the three supreme gods, Viṣṇu, Brahmā and Śiva, who is pictured with Umā, the doe-like goddess, at his left side, could kill Iraṇiyaṉ or diminish his power, let alone the lesser gods and spirits.