கம்பராமாயணம் 6247 · யுத்த 3.17

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'உள்ளில் சாகிலன்; புறத்தினும் உலக்கிலன்; உலவாக்
கொள்ளைத் தெய்வ வான் படைக்கலம் யாவையும் கொல்லா;
நள்ளில் சாகிலன்; பகலிடைச் சாகிலன்; நமனார்
கொள்ளச் சாகிலன்; ஆர் இனி அவன் உயிர் கொள்வார்?

பொருள் · Meaning in Tamil

உள்ளில் சாகிலன் புறத்தினும் உலக்கிலன் - வீட்டுக்கு உள்ளேயும் சாகமாட்டான், வெளியிலும் சாகமாட்டான்; உலவாக் கொள்ளைத் தெய்வவான் படைக்கலம் - என்றும் அழியாது, தெய்வத்தன்மையுடைய படைக்கலங்கள்; யாவையும் கொல்லா - எவையும் அவனைக் கொல்லமாட்டா; நள்ளின் சாகிலன் பகலிடைச் சாகிலன் - இரவிலும் சாகான் பகலிலும் சாக மாட்டான்; நமனார் கொள்ளச் சாகிலன் - எமன் உயிரைக் கவரவும் இறக்கமாட்டான்; ஆர் இனி அவனுயிர் கொள்வார் - அவனது உயிரைக் கவரவல்லோர் யார் இருக்கிறார்கள்?

'உள் புறம்' என்பன வீட்டுக்குள்ளே, வெளியே என்னும் பொருளன, கொள்ளை - மிகுதி. நள்- இரவு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He would not die indoors, nor perish outside; the countless
  2. divine, celestial weapons that never fail could not kill him;
  3. he would not die at night, nor die by day; when Death came
  4. to take him he would not die; who then could take his life?

What the poem says

The boon's most famous clauses: Iraṇiyaṉ could not die inside a house or outside it, by night or by day, by any divine weapon, or even at the hands of Yama, the god of death. The question at the end sets up the answer the story will give.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'uḷḷil cākilaṉ; puṟattiṉum ulakkilaṉ; ulavāk
koḷḷait teyva vāṉ paṭaikkalam yāvaiyum kollā;
naḷḷiṉ cākilaṉ; pakaliṭaic cākilaṉ; namaṉār
koḷḷac cākilaṉ; ār iṉi avaṉ uyir koḷvār?