கம்பராமாயணம் 6248 · யுத்த 3.18

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பூதம் ஐந்தொடும் பொருந்திய - மண்முதலிய ஐந்து பூதங்கள் உடன் பொருந்திய; உணர்வினில் புணரா - சுவைமுதலான ஐம்புல உணர்வினால் புணர்க்கப்படாத; வேதம் நான்கினும் விளம்பிய- நான்கு வேதங்களாலும் சொல்லப்பட்ட; பொருள்களால் விளியான் - மந்திரங்களாலும் சாகான்; தாதை தன்னைத்தான் தனிக் கொலை சூழினும் சாகான் - தன் தந்தையே அவனைத் தனித்துக் கொலை செய்யநினைத்தாலும் சாகமாட்டான்; ஈது அவன் நிலை - இதுதான் அந்த இரணியனது நிலைமை; எவ்வுலகங்கட்கும் இறைவன் - எல்லா உலகங்களுக்கும் அவனே இறைவனாவான்;

வேதங்களில் கூறப்பட்ட மந்திரங்கள் புலன் உணர்வால் அறியக் கூடாதனவாம். மெய்யுணர்வால் மட்டுமே உணரத்தக்கன அவை. 'நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்து மறை மொழிகாட்டுவிடும்' என்று குறள் கூறுமாறு இம்மந்திரச் சொற்கள் ஆக்கவும் அளிக்கவும் வல்லன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. By powers named in the four Vedas, which the senses joined to the five elements
  2. cannot grasp, he would not be slain;
  3. even if his own father plotted to kill him alone, he would not die.
  4. Such was his state; he was lord of all the worlds.

What the poem says

Not even the sacred mantras of the Vedas, which can be known only through true insight and not by the senses, could kill Iraṇiyaṉ, nor could his own father. The commentary quotes the Tirukkuṟaḷ on the power of the words of the perfected to create and protect.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pūtam aintoṭum poruntiya uṇarviṉil puṇarā
vētam nāṉkiṉum viḷampiya poruḷkaḷāl viḷiyāṉ;
tātai taṉṉait tāṉ taṉik kolai cūḻiṉum cākāṉ;
ītu avaṉ nilai; ev ulakaṅkaṭkum iṟaivaṉ.