கம்பராமாயணம் 6249 · யுத்த 3.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆயவன் தனக்கு அருமகன் - அந்த இரணியனுக்கு அரிய ஒரு மைந்தன்; அறிஞரில் அறிஞன் - அறிவாளிகளில் சிறந்த அறிவாளி; தூயர் என்பவர் யாரினும் - தூயவர் என்று சொல்லப்படும் எவரைவிடவும்; மறையினும் தூயான் - வேதங்களை விடவும் தூயவன்; நாயகன் தனி ஞானி- எவ்வுயிர்க்கும் தலைவன், ஒப்பற்ற ஞானி; நல் அறத்துக்கு நாதன்- நல்ல அறங்களுக்குத் தலைவன்; மன்னுயிர்க்குத் தாயின் அன்பினன் - உலகத்து உயிர்களுக்குத் தாயினும் சிறந்த அன்புடையவனாய்; உளன் ஒரு தக்கோன் - மேலான தகுதியுடைய ஒருவனாக உள்ளான்.
'அருமகன் ஒரு தக்கோன் உளன்' என இயையும். ஆயவன் அத்தகையவனான இரணியன். தூயர் மன, மொழி, மெய்களால் தூயவர்களாய நல்லோர். தாயின் - தாயைவிடவும் (தாயினும் நல்லன்)
'அறிஞரில் தூயோன்' (6234) எனப் பின்னரும் பிரகலாதன் குறிக்கப்படுவான். வீடணனை அறிஞரின் மிக்கான் (6169), 'மேதாவிகட்கெல்லாம் மேலான மேன்மையான்' (6364) எனக் கம்பர் குறித்துள்ளமை ஒப்பிட்டு உணரத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To this man was born a rare son, wisest of the wise,
- purer than all who are called pure, purer even than the Veda,
- a leader, a matchless sage, a master of true virtue,
- loving all living beings more than a mother: a worthy one indeed.
What the poem says
Iraṇiyaṉ's son Pirakalātaṉ, Prahlāda, is introduced: wise, pure, a sage from birth and full of motherly love for every creature. The poet describes him in terms close to those used for Vīṭaṇaṉ himself, the narrator of this story, inviting the comparison.