கம்பராமாயணம் 6251 · யுத்த 3.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்று, ஓர் அந்தணன் - என்று கூறிய இரணியன் ஒரு மறை வல்லோனான; எல்லை இல் அறிஞனை ஏவி - எல்லையில்லாத அறிவுடையவனை ஏவி; 'நன்று நீ இவற்கு உதவுதி மறை'- நீ இவனுக்கு வேதங்களை நன்கு கற்றுக் கொடுத்து உதவுவாயாக; என நவின்றான் - என்று சொன்னான்; மற்று அவன் தன்னொடும் சென்று - பிரகலாதனுடன் அந்த மறைவல்லான் சென்று; ஒரு சிறை சேர்ந்தான் - ஓரிடத்தை அடைந்தான்; அன்று நான் மறை முதலிய - அன்றுமுதல் வேதம் முதலான எல்லாவற்றையும்; ஓதுவான் அமைந்தான் - கற்பித்திடத் தொடங்கினான்.
தன் பிள்ளைக்குக் கற்றுத் தருபவன் சிறந்த தகுதி உள்ளவனாய் இருத்தல் வேண்டும் என்பதால் 'எல்லை இல் அறிஞன்' என ஆசிரியனைக் குறிப்பிட்டார். முன்னை வேதத்தின் முதற்பெயர் மொழிவது மொழிந்தேன் (6213), ஓத வேண்டுவதில்லை (62/5) என்பன ஓதப் புகுந்த மாணவனாகிய பிரகலாதன் கூற்றுகள். ஓதாது உணர்ந்த அவனுக்கு, கற்று அறிந்த வேதியன் கற்பிக்க முயல்வது வீண்முயற்சி, ஆயினும், உலகியல் வழக்காலும் அரசன் கட்டளையாலும் கற்பிக்க முயன்றான் என்பது கருத்து. ஓதுவான் - கற்பிப்பதற்கு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So saying, he sent for a Brahmin of boundless learning
- and said, Teach him the Veda well.
- The teacher went with the boy to a place apart
- and from that day set out to teach him the four Vedas and the rest.
What the poem says
A learned Brahmin is appointed as tutor. The commentary notes the irony: Pirakalātaṉ already knows the truth without study, so his teacher's work is in vain, though he obeys the king.