கம்பராமாயணம் 6252 · யுத்த 3.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஓதப்புக்கு அவன் - கற்றுத்தரமுற்பட்ட ஆசிரியன் (பிரகலாதனை நோக்க); 'உந்தை பேர் உரை' எனலோடும் - உனது தந்தையின் பெயரான இரணியாய நம, எனக்கூறு என்றவுடன்; தன் செவித் தொளை போத - தனது இருகாதுத் துளைகளையும், நன்றாக; இரு கைகளால் பொத்தி - இரண்டு கைகளாலும் பொத்திக் கொண்டு; மூதக்கோய்- மூத்த அறிவுடைய பெரியோனே; 'இது நல்தவம் அன்று - இது சிறந்த தவநெறி ஆகாது; என மொழியா - என்று கூறி; வேதத்து உச்சியின் - வேதத்தின் முடிவான உபநிடதங்கள் கூறும்; மெய்ப்பொருட் பெயரினை - உண்மைப் பொருளான பரமனது பெயரை; விரித்தான் - விரித்துரைக்கலானான்.
புக்கு, பொத்தி, மொழியா என்ற வினை எச்சங்கள் விரித்தான் என்ற வினை முற்றைக் கொண்டு முடிந்தன. வேதத்து உச்சியின் மெய்ப் பொருட்பெயர் என்றது 'ஓம் நமோ நாராயணாய' என்ற திருமந்திரத்தை, "வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கை" எனவரும் பெரியாழ்வார் திருமொழி (4, 3, 11) நினைவுகூரத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he began the lesson saying, Recite your father's name,
- the boy stopped up both ears tight with his two hands
- and said, Wise elder, this is not true devotion;
- and he unfolded the name of the true Being at the summit of the Veda.
What the poem says
The teacher begins by having the boy chant homage to Iraṇiyaṉ, the king's name. Pirakalātaṉ covers his ears in horror, rebukes the old man and instead recites the name of Nārāyaṇa, the supreme Being proclaimed by the Upaniṣads, the culmination of the Veda.