கம்பராமாயணம் 6254 · யுத்த 3.24

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"கெடுத்து ஒழிந்தனை, என்னையும் உன்னையும்; கெடுவாய்!
படுத்து ஒழிந்தனை; பாவி! எத்தேவரும் பகர்தற்கு
அடுத்தது அன்றியே அயல் ஒன்று பகர, நின் அறிவின்
எடுத்தது என் இது? என் செய்த வண்ணம் நீ?''என்றான்.

பொருள் · Meaning in Tamil

கெடுவாய் - கெடுமதி உடையவனே; என்னையும் உன்னையும் கெடுத்து ஒழிந்தனை - (நீ கூறிய உரையால்) நீ என்னையும் கெடுத்தாய் உன்னையும் கெடுத்தாய்; பாவி படுத்து ஒழிந்தனை - பாவியே! நம் இருவரையும் இறந்து ஒழியச் செய்துவிட்டாய்; எத்தேவரும் பகர்தற்கு - வேறு எந்தத் தேவர்களும் கூடச் சொல்லுவதற்கு; அடுத்தது அன்றியே அயல் ஒன்று பகர- பொருந்திய உனது தந்தை பெயர் அல்லாத வேறு ஒன்றைக் கூற; நின் அறிவில் எடுத்தது என் இது - உன் அறிவுக்குத் தோன்றிய என்ன செயல் இது; என் செய்த வண்ணம் நீ என்றான் - என்ன காரியம் செய்யத் துணிந்து விட்டாய் என்றான்.

கெடுவாய்- கெட்ட புத்தியுடையவனே. 'எல்லோரும்' கூறும் படி கூறாமல் வேறொருபேர் பகர்ந்ததால் என்னையும், ஏன் உன்னையுமே இரணியன் தண்டிப்பானே! இருவரையும், கெடுத்தாயே' என்றான். எப்படி உன் அறிவில் இப்படிச் சொல்லத் தோன்றியது! என்ன காரியம் செய்து விட்டாய் என்று அஞ்சிக் கூறினான் ஆசிரியன் என்பது பொருள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. You have ruined both me and yourself, you wretch!
  2. You have brought us both to death, sinner! Instead of what every god
  3. fitly utters, you speak some other name: what has your mind
  4. taken up? What is this you have done? he said.

What the poem says

The teacher panics. Every god chants Iraṇiyaṉ's name, and the boy has instead spoken the forbidden name of Viṣṇu. Iraṇiyaṉ will punish them both, so the tutor cries that the child has destroyed them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"keṭuttu oḻintaṉai, eṉṉaiyum uṉṉaiyum; keṭuvāy!
paṭuttu oḻintaṉai; pāvi! et tēvarum pakartaṟku
aṭuttatu aṉṟiyē ayal oṉṟu pakara, niṉ aṟivil
eṭuttatu eṉ itu? eṉ ceyta vaṇṇam nī?'' eṉṟāṉ.