கம்பராமாயணம் 6255 · யுத்த 3.25

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'என்னை உய்வித்தேன்; எந்தையை உய்வித்தேன்; நினைய
உன்னை உய்வித்து, இவ் உலகையும் உய்விப்பான் அமைந்து,
முன்னை வேதத்தின் முதல் பெயர் மொழிவது மொழிந்தேன்;
என்னை குற்றம் நான் இயம்பியது? இயம்புதி''என்றான்.

பொருள் · Meaning in Tamil

என்னை உய்வித்தேன் - என்னை உய்யச் செய்தேன்; எந்தையை உய்வித்தேன் - எனது தந்தையையும் உய்யச் செய்தேன்; இனைய உன்னை உய்வித்து - இத்தகைய உன்னையும் உய்யுமாறு செய்து; இவ்வுலகையும் உய்விப்பான் அமைந்து - இந்த உலகத்தையும் உய்விப்பதற்காக அமைந்து; முன்னை வேதத்தின் - பழமையான வேதங்கள் புகழ்ந்து கூறும்; முதற்பெயர் மொழிவது மொழிந்தேன் - முதற்பெயரென பரமன் திருப்பெயரைக் கூறினேன்; என்னை குற்றம் யான் இயம்பியது - நான் சொன்னதில் என்ன குற்றம் இருக்கிறது; இயம்புதி என்றான் - கூறுவாயாக என்றான்.

வேதமுதற்பெயர் பிரணவம். அதனால் சுட்டப்படும் பொருள் நாராயணன். அந்தப் புனிதமான பெயரைக் கூறிய நான் என்ன குற்றம் செய்தேன் என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. I have saved myself; I have saved my father;
  2. meaning to save you as you are, and this world too,
  3. I spoke the first name of the ancient Veda.
  4. What fault is there in what I said? Tell me, he replied.

What the poem says

Pirakalātaṉ calmly answers that by uttering the supreme name, which the sacred syllable Om points to, he has brought salvation to himself, his father, his teacher and the whole world. Where is the wrong in that?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'eṉṉai uyvittēṉ; entaiyai uyvittēṉ; iṉaiya
uṉṉai uyvittu, iv ulakaiyum uyvippāṉ amaintu,
muṉṉai vētattiṉ mutaṟ peyar moḻivatu moḻintēṉ;
eṉṉai kuṟṟam nāṉ iyampiyatu? iyamputi'' eṉṟāṉ.