கம்பராமாயணம் 6258 · யுத்த 3.28

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தொல்லை நான் மறை - பழமையான நான்கு வேதங்களும்; வரன் முறைத் துணி பொருட்கு எல்லாம் - மரபு பிறழாது துணிந்து கூறிய பொருள்களுக்கெல்லாம்; எல்லை கண்டவன் - முடிவான எல்லை கண்டவனாகியபரனே; என் அகம் புகுந்து இடம் கொண்டது - எனது உள்ளத்திலே புகுந்து விரும்பி உறைவது; என் உள் - எனக்குள்ளாகும்; வேறு இனிப் பெரும்பதம் இல்லை - இதைவிட வேறு சிறந்தபதம் எதுவுமில்லை; யான் அறியாதவல்லையேல்- நான் அறியாதவை ஏதேனும் நீ வல்லவனானால்; நீதியின் வழாத இனி ஓதுவி - நீதி நெறி பிறழாத ஒன்றை இனி எனக்குக் கற்றுக் கொடுப்பாயாக.

வரன்முறை - மரபுநெறி. துணி பொருள் - அறுதியிட்டு துணிந்துரைத்த பொருள். எல்லைகண்டவன் - முடிவிடமாக அமைந்தவன். இடம் கொண்டது - விரும்பி வாழ்வது. அகம் - மனம். என் உள் - எனக்குள். பதம் - நிலை (பதவி); பெயருமாம். நீதியின் வழாத - அறத்துக்கு மாறுபடாத. ஓதுவி-கற்பிப்பாயாக. வல்லையேல் - வல்லவனாயின் என்றதால் அத்தகையவல்லமை உனக்கு இல்லை என்பது குறித்து நின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He who has found the end of all that the ancient four Vedas firmly declare in their due order
  2. has entered my heart and made his home within me;
  3. there is no greater state than this. If you can teach me anything I do not know,
  4. anything that does not stray from righteousness, then teach it to me now.

What the poem says

The boy explains that God, the final goal of all the Vedas, already dwells in his heart, and no higher state exists. He challenges his teacher to teach him anything beyond this that is also righteous, implying that he cannot.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'tollai nāṉmaṟai varaṉmuṟait tuṇi poruṭku ellām
ellai kaṇṭavaṉ akam pukuntu, iṭam koṇṭatu eṉ uḷ;
illai, vēṟu iṉip perum patam; yāṉ aṟiyāta,
vallaiyēl, iṉi, ōtuvi, nītiyiṉ vaḻāta.