கம்பராமாயணம் 6260 · யுத்த 3.30

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வேதத்தானும் - வேதங்களை எல்லாம் கற்று அறிவதாலும்; நல்வேள்வியினானும் - நன்மை தரும் வேள்விகளைச் செய்து முடிப்பதனாலும்; மெய் உணர்ந்த போதத்தானும் - உண்மைப் பொருளை உணர்ந்து அறிந்த மெய்ஞ்ஞானத்தாலும்; அப்புறத்துள எப்பொருளானும் - இவைகளுக்கு அப்பாலுள்ள கர்மம், பக்தி, யோகம் போன்றவற்றினாலும்; சாதிப்பார் பெறும் பெரும்பதம் - சாதித்த மேலோர் அடையும் பெரிய தொரு பேற்றினை; தலைக் கொண்டு சமைந்தேன் - பரமன் நாமத்தைக் கூறுதலை மேற் கொண்டு அடைந்துய்ந்தேன்; ஓதி, கேட்பது பரம் பொருள் - ஓதியும், ஓதக் கேட்கும் பயன் அடைவதற்குரிய மேலான பொருள்; இன்னம் ஒன்று உளதோ - இதைவிடவும் நன்மை பயப்பது வேறு ஒன்று உள்ளதோ?

நற்பலன்தருவது வேள்வியாதலின் 'நல்வேள்வி' என்றார். சாதித்தல்; சித்தியடைதல். பெரும்பதம்; பெரும்பேறு. தலைக் கொண்டு; மேற்கொண்டு. பரம்பொருள்; மேலான பொருள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great state that those who achieve it gain through the Veda, through good sacrifice,
  2. through the wisdom that knows the truth, and through every other means beyond these,
  3. I have taken up and attained. The supreme Being is what one studies and hears of;
  4. is there anything more?

What the poem says

Others reach salvation through Vedic study, sacrifice, true knowledge or other disciplines. Pirakalātaṉ says that by taking up the Lord's name he has already reached that goal. Since the supreme Being is the purpose of all learning, nothing else remains to be learned.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'vētattāṉum, nal vēḷviyiṉāṉum, mey uṇarnta
pōtattāṉum, ap puṟattuḷa ep poruḷāṉum,
cātippār peṟum perum patam talaikkoṇṭu camaintēṉ;
ōtik kēṭpatu paramporuḷ; iṉṉam oṉṟu uḷatō?