கம்பராமாயணம் 6262 · யுத்த 3.32

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'செவிகளால் பல கேட்கிலர் ஆயினும், தேவர்க்கு
அவிகொள் நான்மறை அகப்பொருள் புறப்பொருள் அறிவார்;
கவிகள் ஆகுவார்; காண்குவார், மெய்ப்பொருள்; காலால்
புவிகொள் நாயகற்கு அடியவர்க்கு அடிமையின் புக்கார்.

பொருள் · Meaning in Tamil

காலால்புவிகொள் நாயகற்கு - தன் திருப்பாதங்களால் (அளந்து) உலகத்தைத் தனக்குரியதாக்கிக் கொண்ட தலைவனாகிய திருமாலுக்கு; அடியவர்க்கு அடிமையின் புக்கார் - அடியார்கள் எவரோ அவர்களுக்கு அடிமைபூண்டவர்கள்; செவிகளால் பல கேட்டிலர் ஆயினும்- காதுகளால் பல நூல்களை கேட்கும் கேள்வி ஞானமில்லாதவரானாலும்; தேவர்க்கு அவிகொள் - தேவர்களுக்கு அவியுணவு அளிக்கும் (மந்திரங்களைத் தன்னிடம் கொண்ட); நான்மறை அகப் பொருள் புறப் பொருள் அறிவார் - நான்கு வேதங்களும் நுட்பமாகவும் வெளிப்படை யாகவும் கூறிய எல்லாப் பொருள்களையும் அறியவல்லாராவர்; கவிகள் ஆகுவார் - தெய்விகக் கவிஞர்களும் ஆவார்கள்; மெய்ப் பொருள் காண்குவர் - மெய்ப்பொருளைக் கண்டறிய வல்லவராவார்.

மகாபலியினிடம் மூவடி மண் கேட்டுப் பெற்று, ஓரடியில் உலகம் முழுவதையும் உரிமையாக்கிக் கொண்டவன் என்பது 'காலால் புவிகொள் நாயகன்' எனக் கூறப்பட்டது. இவ்வாறு பொருள் உரைத்தல் பொருந்தாது. ஏனெனில் இது, வாமனா வதார சரிதை. இப்பாடல் பிரகலாதன் கூற்றாக வருகிறது. (கம்பன் கூற்றாகில் தவறில்லை.) நரசிங்காவதாரத்துக்குப் பிற்பட்ட வாமனாவதார சரிதை நிகழ்ச்சியை நரசிங்காவதாரமே இன்னும் நிகழாதிருக்கிற போது முன்னர்க்கூறுதல் காலமலைவு என்னும் குற்றத்தை ஏறிட்டு வழுவாம் ஆதலின் தன் திருவடியாலே உலகத்தைத் தனக்கு அடிமையாக்கி ஆட்கொண்டருளும் நாயகன் என்று பொதுவாக இறைவன் ஆட்கொள்ளும் திறம்பற்றியதாகப் பொருள் உரைத்தலே சிறந்தது என்பது மகாவித்துவான்; மயிலம், பேராசிரியர். வே. சிவசுப்பிரமணியன் அவர்கள் கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Though they have not heard many things with their ears,
  2. they know the inner and outer meaning of the four Vedas that bring the gods their offerings;
  3. they become poets; they see the true reality; those who have entered the service
  4. of the servants of the Lord who took the earth with his feet.

What the poem says

Pirakalātaṉ says that those who serve the devotees of Viṣṇu, without any formal learning, come to know the Vedas inside out, become inspired poets and see the truth. "The Lord who took the earth with his feet" normally recalls Viṣṇu's dwarf avatar, but the commentary notes that this event comes after Narasiṃha, so here it may mean more generally that God makes the world his own through his feet.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'cevikaḷāl pala kēṭṭilar āyiṉum, tēvarkku
avi koḷ nāṉmaṟai akap poruḷ puṟapporuḷ aṟivār;
kavikaḷ ākuvār; kāṇkuvār, meypporuḷ; kālāl
puvi koḷ nāyakaṟku aṭiyavarkku aṭimaiyiṉ pukkār.