கம்பராமாயணம் 6264 · யுத்த 3.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மறையவன்- ஆசிரியனாகிய அந்த வேதியன்; மாற்றம் யாது ஒன்றும் உரைத்திலன் - பிரகலாதன் கூறியன கேட்டு எந்த ஒரு மறு மொழியும் கூறவில்லை; மறுகி- மனம் கலங்கி; ஏற்றம் ஏன்? - இனி எனக்கு என்ன ஏற்றம் வரப் போகிறது? எனக்கு இறுதி வந்து எய்தியது - எனக்கு அழிவு காலம் வந்து சேர்ந்தது; என்னா - என்று எண்ணியவனாக, ஊற்றம் இல்லவன் - மனத்துணிவு இல்லாத அவன்; ஓடினன் கனகனை உற்றான் - ஓடோடியும் சென்று இரணியனை அடைந்தான்; தோற்ற வந்த தோர் - பின்னால் நேர இருப்பதை உணர்த்த வந்த ஒரு; கனவு கண்டனன் எனச் சொன்னான் - கனவு கண்டவனைப் போல இரணியனிடம் சொல்லலானான்.
ஏற்றம் - ஆக்கம். ஊற்றம் - மனஉறுதி. கனகன் - இரணியன். தோற்ற வந்த தோர் கனவு; பின்னால் நேர இருக்கும் தீங்கைத் தெரிவிக்க வந்த ஒரு கனவு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The Brahmin said not a single word in reply; troubled,
- thinking, What hope have I? My end has come,
- the faint-hearted man ran off and reached Kaṉakaṉ,
- and spoke like one who had seen a dream foretelling what was to come.
What the poem says
The tutor has no answer. Certain he is doomed, he runs to Iraṇiyaṉ, here called Kaṉakaṉ, a name that also means golden, and reports what happened as if relating a nightmare that foretells disaster.