கம்பராமாயணம் 6265 · யுத்த 3.35

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'எந்தை! கேள் : எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் இயம்பச்
சிந்தையால் இறை நினைதற்கும் அடாதன செப்பி,
'முந்தையே உணர்ந்தேன் பொருள் முற்றும்'என்று உரைத்து, உன்
மைந்தன் ஓதிலன் வேதம்''என்று உரைத்தனன், வணங்கி.

பொருள் · Meaning in Tamil

வணங்கி - இரணியனை அடைந்த மறையவன் அவனை வணங்கி, எந்தை கேள் - எனக்குத் தந்தை போன்ற தலைவனே நான் உரைப்பதைக் கேட்பாயாக; உன் மைந்தன் - உனது மகன்; எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் - எனக்கு இந்தப் பிறவியிலோ அடுத்த பிறவியிலோ; இயம்பச் சிந்தையால் இறை நினைத்தற்கும் - கூறுவதற்கும் ஒரு சிறிது மனத்தில் நினைப்பதற்கும்; அடாதன செப்பி - தகாதனவற்றைக் கூறி; 'முந்தையே நினைந்து என் பொருள் முற்றும்' - முன்பே நினைத்து, எனக்கு வேதப் பொருள் அத்தனையும் முற்றுப் பெற்றுள்ளது; என்று உரைத்து - என்று கூறி; வேதம் ஓதிலன் - நான் கற்றுத் தரத் தொடங்கிய வேதத்தை ஓதாதவனானான்; என்று உரைத்தனன் - என்று, இரணியனிடம் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Father, listen: things not fit for me to speak in this life or the next,
  2. nor even to think of for a moment in my mind, he spoke,
  3. and saying, Long since I have thought on it and all my learning is complete,
  4. your son will not study the Veda. So he said, bowing.

What the poem says

Bowing before the king, the tutor reports that the prince uttered things so unspeakable that the teacher dare not repeat or even think them, claimed his knowledge was already complete, and refused his lessons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'entai! kēḷ: eṉakku immaikkum maṟumaikkum iyampac
cintaiyāl iṟai niṉaittaṟkum aṭātaṉa ceppi,
'muntaiyē niṉaintu eṉ poruḷ muṟṟum' eṉṟu uraittu, uṉ
maintaṉ ōtilaṉ vētam'' eṉṟu uraittaṉaṉ, vaṇaṅka.