கம்பராமாயணம் 6266 · யுத்த 3.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்னகேட்டு, அவன் - மறையவன் கூறிய அவற்றைக் கேட்டு, இரணியன் மறையவனை நோக்கி, அந்தண - அந்தணனே; அந்தணர்க்கு அடாத - மறையவர்கள் கேட்கத் தகாததும்; முன்னர் யாவரும் மொழிதரும் முறைமையில்படாத - முன்பு யாரும் கூறுதற்குரிய முறைமையில் படாததும்; தன்னது உள் உறும் உணர்ச்சியால் - தனது உள்ளத்தே முகிழ்த்த உள்ளுணர்ச்சியினால்; புதுவது தந்தது - புதியதாகக் கூறியதுமான; என்ன சொல் அவன் இயம்பியது - என்ன சொல் அவன் சொன்னது? இயம்புதி என்றான் - நீ கூறுவாயாக என்றான்.
அன்ன - மறையவன் கூறிய அந்தச் சொற்கள். அடாத - தகாத. முறைமையில் படாத - முறையோடு பொருந்தாத.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Hearing that, he said, Brahmin, what was it, unfit for Brahmins,
- not in the manner in which everyone has always spoken before,
- some new thing he produced from feelings within him?
- What was the word? Tell me what he said.
What the poem says
Iraṇiyaṉ is puzzled and curious. He demands that the Brahmin tell him exactly what new and improper word his son has invented out of his own inner feelings, a word that no one before has ever been allowed to say in his realm.