கம்பராமாயணம் 6267 · யுத்த 3.37

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"அரசன் அன்னவை உரைசெய, மறையவன் அஞ்சி,
சிரதலம் கரம் சேர்த்திடா," செவித்தொளை சேர்ந்த
உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரைசெயின், உரவோய்!
நரகம் எய்துவென்; நாவும் வெந்து உகும்''என நவின்றான்.

பொருள் · Meaning in Tamil

அரசன் அன்னவை உரை செய - அரசனாகிய இரணியன் அவ்வாறு கூறினானாக; மறையவன் அஞ்சி - அந்தணன் பயந்து; சிரதலம் கரம் சேர்த்திடா - தலைமீது கரங்களைக் கூப்பி வணங்கி; 'செவித் தொளை சேர்ந்த - காதுத் தொளைகளிலே புகுந்த; உரகம் அன்ன சொல் - பாம்புக் கொப்பான அந்தச் சொல்லை; யான் உனக்கு உரை செயின் - நான் உனக்குச் சொல்லு வேனாயின்; உரவோய் - வலிமை மிக்கவனே; நரகம் எய்துவென் - நான் நரகத்தை அடைவேன்; நாவும் வெந்து உகும் - எனது நா வெந்து அழியும்; என நவின்றான் - என்று கூறினான்.

'பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்பதற் கொப்ப மறையவன் நடத்தை அமைந்தது. பிரகலாதன் ஓதிய திருவெட்டெழுத்தைத் தான் சொன்னால் நரகம் கிடைக்கும், நாக்கு வெந்துபோகும் என்னும் நிலையை உன்னுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the king said this, the Brahmin, afraid,
  2. joined his hands upon his head and said, If I repeat to you that word,
  3. which entered the holes of my ears like a serpent, O mighty one,
  4. I will go to hell and my tongue will burn and fall away.

What the poem says

The Brahmin dares not say the name of Viṣṇu. He compares the word to a snake that crept into his ears and says that to speak it would damn him and scorch his tongue. The commentary sees here the proverb that when a demon reigns, even the scriptures eat corpses: under a tyrant, the holiest name has become a curse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"aracaṉ aṉṉavai uraiceya, maṟaiyavaṉ añca,
ciratalam karam cērttiṭā, "cevit toḷai cērnta
urakam aṉṉa col yāṉ uṉakku uraiceyiṉ, uravōy!
narakam eytuveṉ; nāvum ventu ukum'' eṉa naviṉṟāṉ.