கம்பராமாயணம் 6268 · யுத்த 3.38

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கொடியோன் - மிகக் கொடியவனாகிய இரணியன்; கொணர்க என்மைந்தனை வல் விரைந்து என்றனன் - என் மகனை, மிகவிரைவில் இங்கு அழைத்து வாருங்கள் என ஏவலர்களுக்கு உத்தரவிட்டான்; உணர்வு இல் நெஞ்சினன் ஏவலர் கடிதினின் ஓடி - நல்லுணர்வு இல்லாத நெஞ்சினனாகிய இரணியனின் ஏவலர்கள் விரைவாகச் சென்று; கணனின் எய்தினர் - ஒரு கணப் பொழுதில் பிரகலாதனை அடைந்தார்கள்; பணி என - அரசனது 'கட்டளை' என்று கூற; துணை இலான் தனை - தனக்குவமையும் ஒப்பும் இல்லாதவனான பரந்தாமனை; துணை என உடையவன் - தனக்கு துணை உடையவனான பிரகலாதன்; தாதையைக் கண்டான் தொழுதான் - தனது தந்தையான இரணியனைக் கண்டு வணங்கினான்.

உணர்வு - நல்ல அறிவு. வல்விரைந்து - மிக விரைவாக. கணனின் - கணப் பொழுதில். 'துணையிலான்' என்றது தனக்குவமையில்லாத பரமனை. 'துணையென உடையவன்' திருமாலையே உயிர்த்துணை எனக் கொண்ட பிரகலாதனை. செயல்களின் விரைவு பாடலில் புலப்படுகின்றது. ஏவலர் கடமைப்பாங்கும் பிரகலாதனின் பணிவும் தெள்ளிதின் உணர்த்தப்பட்டன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bring my son here quickly! ordered the cruel one,
  2. he whose heart had no understanding; the attendants ran swiftly
  3. and reached him in an instant, saying, It is a command; he saw his father;
  4. he who had for his companion the one who has no companion bowed down.

What the poem says

Iraṇiyaṉ summons his son. The servants race to fetch him, and Pirakalātaṉ, whose only support is the matchless Lord, comes and bows respectfully to his father. The play on "companion" contrasts the God who has no equal with the boy who has him as his sole ally.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'koṇarka eṉ maintaṉai val viraintu" eṉṟaṉaṉ, koṭiyōṉ,
uṇarvu il neñciṉaṉ; ēvalar kaṭitiṉiṉ ōṭi,
kaṇaṉiṉ eytiṉar, "paṇi" eṉa, tātaiyaik kaṇṭāṉ;
tuṇai ilāṉtaṉait tuṇai eṉa uṭaiyavaṉ toḻutāṉ.