கம்பராமாயணம் 6269 · யுத்த 3.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தொழுத மைந்தனை - (தனது பாதங்களில் வீழ்ந்து) வணங்கிய மகனை; சுடர்மணி மார்பிடை - ஒளிமிக்க தனது மார்பிலே பூசப்பட்ட; சுண்ணம் எழுத -வாசனைப் பொடிபிரகலாதன் உடலிலே படும்படி; அன்பினில் இறுகுறத் தழுவி - அன்போடு, இறுகத் தழுவி; மாடு இருத்தி - தனக்குப் பக்கத்திலே இருக்கச் செய்து; முழுதும் நோக்கி - மகனைப் பாதாதிகேசமாக முழுவதும் பார்த்து; நீ வேதியன் கேட்கிலன் முனிய - மகனே! நீ ஆசிரியன் கேட்க இயலாதவனாக கோபம் கொள்ளும்படி; பழுது சொல்லியது என்? - தவறுபடக் கூறியது என்ன?; அது பகருதி என்றான் - அதைக் கூறுவாயாக என்றான்.
சுடர் மணி மார்பு - இரணியன் பொன் நிறமுடையவன். ஒளிமிக்க ஆபரணங்களும் அணிந்துள்ளான். எனவே, அவன் மார்பு ஒளியுடைய மார்பு எனப்பட்டது. எழுத - பூச.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The son who bowed he hugged tight in love, so that the fragrant powder
- on his chest shining with gems left its mark on him, seated him at his side,
- looked him over from head to foot and said, What faulty thing did you say
- that the Brahmin could not bear to hear and grew angry? Tell me that.
What the poem says
Despite his anger at the report, Iraṇiyaṉ greets his son with real tenderness, pressing him to his jewelled, perfumed chest and gazing at him fondly. Only then does he ask what the boy said that so upset his teacher.