கம்பராமாயணம் 628 · பால 10.76
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஓங்கா நின்ற - வளர்கின்ற; இருள் ஆய் - இருளின் வடிவமாய்; வந்து - வந்து; உலகை விழுங்கி - உலக முழுவதையும் கவர்ந்து; மேன் மேலும் - மேலும் மேலும்; வீங்கா நின்ற - வளர்ச்சி அடையும், கரு நெருப்பின் இடையே - கரிய தீயின் இடையே, எழுந்த - தோன்றும்; வெண்நெருப்பே - வெண்ணிறமுள்ள நெருப்பே; நீங்காமாயை - நீங்காத மாயையை; அவர்தமக்கு - செய்து வரும் அந்த உத்தமனுக்கு; நிறமே தோற்று - நிறத்தால் தோல்வியுற்று; புறமே போய் - (உலகிற்குப்) புறம்பாகச் சென்று; ஏங்காக் கிடக்கும் - ஏங்கிக் கிடக்கின்ற; எறி கடற்கும் - அலை வீசுகிற கடலுக்கும்; எனக்கும் - (காம வேதனையால் வருந்தும்) எனக்கும்; கொடியை ஆனாயே - (நீ) கொடுஞ்சொல் புரிவாய் ஆயினை.
பிரிந்தவர்களுக்குத் தென்றல், சந்திரன் ஆகியவை காதல் நோயை மிகுவிக்கும் பொருள்கள் துயரத்தை விளைத்தலால் அன்னவர் அவற்றை வெறுத்துக் கூறுதல் இயற்கை. சந்திரன்: தன் காம வேதனையை மிகச் செய்தும், கடலைப் பொங்கச் செய்தும் அலைத்தலால் சந்திரனை நோக்கிக் 'கடற்கும் எனக்கும் கொடியை ஆனாயே' என்றாள் சீதை. ஏங்காக் கிடத்தல்: (சிலேடையாக) ஒலித்தல், ஏங்கிக் கிடத்தல். 'மாயை யவர்தமக்கு நிறமே தோற்று' - கடலின் கரு நிறத்தைக் காட்டிலும் இராமனது திருமேனி நிறமே மிகக் கறுத்துள்ளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'To the tossing sea, which lost in colour itself to him of endless enchantment and went outside
- and lies there moaning, and to me, you have become cruel,
- O white fire that rose in the midst of the black fire
- that came as swelling darkness, swallowed the world and grows ever greater!'
What the poem says
Cītai now rails at the moon. Night is a black fire that has swallowed the world, and the moon is a white fire risen in the middle of it. It torments two sufferers: the sea, which it stirs into swelling tides, and Cītai, whose longing it inflames.
She imagines the sea moaning because it was beaten in a contest of colour by Irāmaṉ, whose dark body is darker even than the ocean, and so was driven out to lie at the edge of the world. The word for its lying there groaning also means roaring, a deliberate double sense.