கம்பராமாயணம் 6282 · யுத்த 3.52

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

திருஇலீ - திருவில்லாதவனே (நல்ல பேறு இரக டட க் ஒருவன் - ஒப்பற்ற ஒருவனாகிய நான்; யாவர்க்கும் எவற்றிற்கும் இவ்வுலகில் வாழும் எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும்; உலகிற்கும் முதல்வன் - இந்த உலகுக்கும் முதல்வனாயுள்ளேன்; தருதல், காத்தல், அவை தவிர்த்தல் என்று இவை செயத் தக்கோன் - எல்லா உயிர்களையும் படைத்தல், காத்தல், அழித்தல் என்று கூறப்படும் முத் தொழிலையும் செய்யத்தக்கவன் நானே; கருமத்தால் அன்றி - (இதில் நேரில் காணும்) காட்சி அளவையினால் அல்லாது; காரணத்தால் உள்ள காட்சி- கருதுதல் அளவையாகிய அனுமானப்பிரமாண உணர்வால்; மற்று இது - அறிந்து உணரும் இதனை; எம்மறைப் பொருள் எனத் தெரிந்தாய் - எந்த வேதத்தில் கூறப்படும் பொருள் என்று தெரிந்து கொண்டாய்.

தனக்குப் பின் தனது செல்வமனைத்தையும் துய்க்க வேண்டிய மகன் வீணாகப் பகைவன் பெயரைக் கூறி, செல்வத்தை இழக்கப் போகிறானே என்பதை உணர்த்துவான் 'திருவிலீ' எனப் பிரகலாதனை அழைத்தான் என்க. கருமம் - காட்சி. காரணம் - அநுமானம் (கருதுதல்)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. One, the first of all beings, all things and the world,
  2. fit to create, to protect and to destroy them all,
  3. a vision known by inference and not by sight:
  4. you luckless boy, from which scripture did you learn this?

What the poem says

Iraṇiyaṉ challenges the idea of an invisible supreme God who creates, preserves and destroys, known only by reasoning and not seen directly. He calls his son luckless because by worshipping his enemy he is throwing away the kingdom he would have inherited.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'oruvaṉ, yāvarkkum evaṟṟiṟkum ulakiṟkum mutalvaṉ,
tarutal, kāttu, avai tavirttal eṉṟu ivai ceyat takkōṉ,
karumattāl aṉṟik kāraṇattāl uḷḷa kāṭci
tiruvilī! maṟṟu itu em maṟaip poruḷ eṉat terintāy?