கம்பராமாயணம் 6283 · யுத்த 3.53

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'ஆதி அந்தங்கள் இதனின் மற்று இல்லை, பேர் உலகில்;
வேதம் எங்ஙனம், அங்ஙனம் அவை சொன்ன விதியால்,
கோது இல் நல்வினை செய்தவர் உயர்குவர்; குறித்துத்
தீது செய்தவர் தாழ்குவர்; இது மெய்ம்மை, தெரியின்.

பொருள் · Meaning in Tamil

பேருலகின் - மிகப் பெரிய இந்த உலகத்திலே; ஆதி அந்தங்கள் - வேதத்தின் ஆரம்பமுதல் முடிவு வரை கூறுவது; இதனின் மற்று இல்லை - இதைவிட வேறு எதுவுமில்லை; வேதம் எங்கனம் - வேதங்கள் எவ்வாறு எதனை அறிவுறுத்தியதோ; அங்கனம் அவை சொன்னவிதியால் - அவ்வாறு அவ்வேதங்கள் சொன்ன முறைப்படி; கோதுஇல் நல்வினை - குற்றமில்லாத நல்ல செயலை; செய்தவர் உயர்குவர் - செய்தவர்கள் உயர்வடைவார்கள்; குறித்துத் தீது செய்தவர் தாழ்குவர் - எண்ணித் தீமை செய்தவர் தாழ்வடைவார்கள்; இது தெரியின் மெய்ம்மை - ஆராய்ந்து பார்த்தால் இதுதான் உண்மை.

சிறிதும் குற்றமில்லாத செயல்களை 'கோதில் நல்வினை' என்றார். குறித்தல் - மனத்தில் நினைத்தல். அறியாது தவறு செய்வாரைப் பெரியோர் மன்னிப்பர். அறிந்து செய்யும் தீமை மன்னிக்கக் கூடியதல்ல என்பதால் 'குறித்துத் தீது செய்தவர் தாழ்குவர்' என்றார். வேதங்கள் கூறும் நல்ல செயல்களைச் செய்வோர் உயர்வர்; வேதங்கள் விலக்கிய தீய செயல்புரிவோர்தாழ்வர் என்பதே வேதம் ஆரம்பமுதல் இறுதி வரை கூறுவது. படைத்தல் முதலியவற்றைச் செய்து, நல்வினை தீவினைப் பயன்களை அனுபவிக்கச் செய்ய, ஒரு தலைவன் (இறைவன்) வேண்டியதில்லை என்பது கருத்து. மெய்ம்மை - உண்மை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. There is nothing else, from beginning to end, in this great world:
  2. as the Veda says, so by the rules it lays down
  3. those who do flawless good deeds rise up, and those who knowingly
  4. do evil sink down; that, if you look into it, is the truth.

What the poem says

Iraṇiyaṉ offers his own theology. The Veda simply teaches that good deeds raise a person and deliberate wrongdoing brings him down. Karma works by itself, so there is no need for a God who creates, sustains and judges the world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'āti antaṅkaḷ itaṉiṉ maṟṟu illai, pēr ulakiṉ;
vētam eṅkaṉam, aṅkaṉam avai coṉṉa vitiyāl,
kōtu il nalviṉai ceytavar uyarkuvar; kuṟittut
tītu ceytavar tāḻkuvar; itu meymmai, teriyiṉ.