கம்பராமாயணம் 6284 · யுத்த 3.54

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'செய்த மாதவம் உடைமையின் அரி அயன் சிவன் என்று
எய்தினர் பதம் இழந்தனர் யான் தவம் இயற்றிப்
பொய் இல் நாயகம் பூண்டபின், இனி அது புரிதல்
நொய்யது ஆகும் என்று, ஆரும் என் காவலின் நோலார்.

பொருள் · Meaning in Tamil

செய்த மாதவம் உடைமையின் - நான் செய்த சிறந்ததவம் இருப்பதால்; யான்தவம் இயற்றி - நான் தவம் செய்து, (அதன்பலனால்); பொய்இல் நாயகம் பூண்டபின் - பொய்மையில்லாத இந்த உலகத்துக்குத் தலைமை பூண்ட பின்பு; அரி, அயன் சிவன் என்று எய்தினார் - பிரமன், திருமால், சிவன் என்னும் மூவரும் (தாங்கள் அடைந்திருந்த); பதம் இழந்தார் - மேலான பதங்களை இழந்தனர்; இனி அது புரிதல் - இனித்தமது பதவியைக் காத்துக் கொள்ள தவம் செய்வதென்பது; நொய்யது ஆகும் என்று - (எனது ஆட்சியில்) சிதைந்து அழியும் என்று நினைத்து; ஆரும் என் காவலில் நுழைவார்- பிரமன் முதலிய எவரும் என் ஆளுகைக்கு உட்படுவாராயினர்.

பொய் இல் நாயகம் - என்றும் மாறாத தலைமை. தாம் செய்த தவத்தால் தலைமை எய்தினரே அன்றி அரி முதலோரும் இயல்பான தலைவர்கள் அல்லர் என்பான் 'செய்த மாதவம் உடைமையின் அரி அயன் சிவன் என்றெய்தினார்' என்றான் என்பதும் ஒரு பொருளாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because of great penance they had done, Ari, Ayaṉ and Civaṉ held their states;
  2. they lost them once I had performed penance
  3. and taken up true lordship; thinking that to seek those states now
  4. would be futile, everyone enters under my protection.

What the poem says

Iraṇiyaṉ claims the three great gods owed their rank to their own past austerities and lost it when his greater penance made him lord. Knowing it would be useless to try again under his rule, they and everyone else have submitted to him. His view is that rank comes from effort, not from divine nature.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'ceyta mā tavam uṭaimaiyiṉ ari ayaṉ civaṉ eṉṟu
eytiṉār patam iḻantaṉar yāṉ tavam iyaṟṟi
poy il nāyakam pūṇṭapiṉ, iṉi atu purital
noyyatu ākum eṉṟu, ārum eṉ kāvaliṉ nuḻaivār.