கம்பராமாயணம் 6285 · யுத்த 3.55

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'வேள்வி ஆதிய புண்ணியம் தவத்தொடும் விலக்கி,
கேள்வி யாவையும் தவிர்த்தனென், 'இவை கிளர்பகையைத்
தாழ்வியாதன செய்யும்'என்று; அனையவர் தம்பால்
வாழ்வு யாது? அயல் எவ் வழிப் புறங்கொண்டு வாழ்வார்?

பொருள் · Meaning in Tamil

வேள்வி ஆதிய - புனிதமான வேள்விகள் முதலானவையும்; புண்ணியத்தவத்தொடும் விலக்கி - புண்ணியச் செயலானதவம் புரிதலையும் பிறர் செய்யாதபடி விலக்கி; கேள்வியாவையும் தவிர்த்தனென் - நல்ல நூற் கேள்வி முதலியவற்றையும் நிகழாதபடி நான் தவிர்த்து விட்டேன்; இவை கிளர் பகையை - வேள்வி முதலான இவையெல்லாம் பொங்கி எழும் பகையை; தாழ்வியாதன செய்யும் - தாழ்ந்து பணியாதவாறு செய்யும்; என்று - என்பதால் (எவரும் தவம் முதலியன செய்யாது தவிர்த்தேன்); அனையவர் தம்பால் வாழ்வுயாது - அயன் முதலானோர்க்கு (எனது ஆட்சியில்) அமைந்த நல்வாழ்வு யாது?; அயல் எவ்வழி - வேறு எந்த விதத்திலே (அவர்கள் எனக்கு மாறாக); புறங் கொண்டு வாழ்வார் - புறத்தே துணை பெற்று வாழ்வர்?

வேள்வி ஆகிய - வேள்வி முதலானவை. தவிர்த்தனென் - விலக்கினேன். புறம் கொண்டு - புறத்தே துணையைப் பெற்று. அயல் - வேறாக. கேள்வி: வேதம் முதலியவைகளைக் கேட்டல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Sacrifice and other merit-making, together with penance, I have forbidden,
  2. and stopped all sacred learning, saying, These would make the rising enemy
  3. refuse to bow; what life is left to such as those?
  4. By what other path, taking outside help, could they live?

What the poem says

Iraṇiyaṉ explains why he banned sacrifices, austerities and study of scripture: these practices give strength to his enemies, the gods. With them forbidden, the gods have no source of power and no outside help, so they cannot rise against him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'vēḷvi ātiya puṇṇiyam tavattoṭum vilakka,
kēḷvi yāvaiyum tavirttaṉeṉ, 'ivai kiḷar pakaiyait
tāḻviyātaṉa ceyyum' eṉṟu; aṉaiyavartampāl
vāḻvu yātu? ayal ev vaḻip puṟaṅkoṇṭu vāḻvār?