கம்பராமாயணம் 6286 · யுத்த 3.56

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'பேதைப் பிள்ளை நீ; பிழைத்தது பொறுத்தனென்; பெயர்த்தும்,
ஏது இல் வார்த்தைகள் இனையன விளம்பலை; முனிவன்
யாது சொல்லினன், அவை அவை இதம் என எண்ணி,
ஓது; போதி''என்று உரைத்தனன் உலகு எலாம் உயர்ந்தோன்.

பொருள் · Meaning in Tamil

பேதைப் பிள்ளை நீ - நீ அறிவு நிரம்பப் பெறாத சிறுவன்; பிழைத்தது பொறுத்தனன் - செய்த பிழையைப் பொறுத்தேன்; பெயர்த்தும் ஏது இல்வார்த்தைகள் இனையன இயம்பலை - மறுபடியும் பகைவரைப் புகழ்ந்து பேசும் சொற்களான இவை போன்றவற்றைச் சொல்லாதே; முனிவன் யாது சொல்லினன் - ஆசிரியனாகிய முனிவன் என்ன சொல்லித் தருகிறானோ; அவை அவை இதம் என எண்ணி - அவையே நமக்கு நன்மை பயப்பன என நினைத்து; ஓதி போதி என்று - (ஆசிரியனுடன்) சென்று, கற்கத் தொடங்குவாயாக என்று; உலகு எலாம் உயர்ந்தோன் உணர்த்தினன் - எல்லா உலகங்களிலும் மேலாண்மை செலுத்தும் இரணியன் கூறினான்.

உலகெலாம் உயர்ந்தோன் - இரணியன் உலகெங்கும் புகழ் உயர்ந்து விளங்குபவன் என்பது பொருள். பிழைத்தது - தவறு செய்தது. முனிவன் -பாடம் கற்பிக்கவந்த அந்தணன். இதம் - நன்மை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. You are a foolish child; I forgive your fault. Do not again
  2. speak such baseless words; whatever the sage teaches,
  3. take it all as your good, and go and study,
  4. said he who stood highest over all the worlds.

What the poem says

For the moment Iraṇiyaṉ's love for his son wins out. He forgives the boy as a naive child, forbids him to speak of Viṣṇu again and sends him back to his tutor to learn the approved lessons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'pētaip piḷḷai nī; piḻaittatu poṟuttaṉeṉ; peyarttum,
ētu il vārttaikaḷ iṉaiyaṉa viḷampalai; muṉivaṉ
yātu colliṉaṉ, avai avai itam eṉa eṇṇi,
ōti; pōti'' eṉṟu uraittaṉaṉ ulaku elām uyarntōṉ.