கம்பராமாயணம் 6287 · யுத்த 3.57
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விரை உள அலங்கலாய் - மணம் கமழும் மாலையணிந்தவனே; உரை உளது உணர்த்துவது - உனக்கு நான் உணர்த்தும் வார்த்தை ஒன்று உள்ளது; உணர்ந்து கோடியேல் - நான் கூறுவதை உணர்ந்து கொள்வாயேல் (கூறுவேன்); வேத வேள்வியின் கரை உளது - (என்உரை) வேத ஞானத்துக்கும் வேள்வியின் பலனுக்கும் முடிவிடமாயுள்ளது; யாவரும் கற்கும் கல்வியின் பிரை உளது - எல்லோரும் கற்கின்ற கல்வியாகிய பாலுக்கு பிரை போன்ற நிறை உள்ளது; என்பது மைந்தன் பேசினான் - என்பன போன்றவைகளை மகனாகிய பிரகலாதன் கூறினான்.
விரை - மணம். அலங்கல் - மாலை. பிரை- மோர்த்துளி. பாலை உறைய வைக்கும் பிரை போல யாவரும் கற்கும் கல்வியைச் செறிய வைக்கும் உரை உளது. எனது உரையான எட்டெழுத்து மந்திரம் வேத ஞானத்துக்கும், வேள்விப் பயனுக்கும் முடிந்த முடிவான எல்லை நிலமாயுள்ளது என்றான். வேதம்- வேதத்தால் எய்தும் ஞானம். வேள்வி - வேள்வியால் எய்தும்பயன் இவைகளின் முடிவிடமாயிருப்பது பரமன் திருநாமம் என்பது கருத்து. விறகில் தீயினன் எனத் தொடங்கும் பாடலில் நன்பாலில் படு நெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்... முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே என வரும் அப்பர் (திருமுறை35-பாட 893) வாக்கை நினைந்து ஒப்பிடலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- There is a word I have to tell you, if you will take it in,
- O you of the fragrant garland: it is the far shore of Veda and sacrifice;
- it is the curdling starter for all the learning everyone learns.
- So the son spoke.
What the poem says
Pirakalātaṉ does not give up. He says the sacred name is the goal of all Vedic wisdom and ritual, and compares it to the drop of buttermilk that sets milk into curd: it makes all other learning take form and become useful.