கம்பராமாயணம் 6288 · யுத்த 3.58
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வேந்த - அரசனே; 'வித்து இன்றி விளைவது ஒன்று இல்லை - விதையில்லாது விளைவது எதுவுமில்லை; பித்து இன்றி - (பொருளல்லவற்றைப் பொருள் என்றுணரும்) மயக்க உணர்வை விட்டு; உணர்தியேல் - (உண்மைப் பொருளை) உணர்வாயானால்; அளவைப் பெய்குவேன் - (மெய்ப்பொருளை அறியும்) வகையை விளக்கிக் கூறுவேன்; உய்த்து - (மெய்ப்பொருளிலே) மனத்தைச் செலுத்தி; ஒன்றும் ஒழிவுஇன்றி - சிறிதும் இடைவிடாமல்; உணர்தற்பாற்று எனா - உணரத்தக்கது என்று; கைத்து ஒன்று நெல்லி அம் கனியின் - உள்ளங்கையில் கொண்ட நெல்லிக் கனியைப் போல; காண்டியால் - (மெய்ப்பொருளை) காண்பாய் (என்றான்).
எல்லா உயிர்களுக்கும் ஆதார சக்தியாக விளங்கும் பரமனை அன்றி உலகம் நிலை பெறுதல் இயலாது என்பதை 'வித்தின்றி விளைவில்லை' என்ற உவமை கூறி விளக்கினான். பித்து - மருள் (மயக்க உணர்வு) அளவு - அறியும் வகை. பெய்குவேன் - விளக்கிக் கூறுவேன். ஒழிவின்றி - இடைவிடாமல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Nothing grows without a seed, O king; if, free of your madness,
- you will understand, I will set out the means of knowing;
- if you apply your mind to it without a break, knowing it is to be known,
- you will see it like a gooseberry held in the hand.
What the poem says
Pirakalātaṉ argues that just as no crop grows without a seed, the world needs a first cause, God. If his father lays aside his delusion, he will show him how to know this truth, which can become as plain as a gooseberry in the palm, a common Tamil image for something obvious.