கம்பராமாயணம் 6289 · யுத்த 3.59

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஒருவன்- ஒப்பற்ற ஒருவனாகிய இறைவன்; தன்னுளே உலகங்கள் எவையும் தந்து - எல்லா உலகங்களையும் தன்னுள்ளே இருந்து தோன்றச் செய்து; அவை தன்னுளே நின்ற - அவ்வுலகங்களுக்குள் அந்தர்யாமியாய் நின்று; தான் அவற்றுள் தங்குவான் - தான் அவைகளுக்குள் எங்கும் நிறைந்து தங்கி இருப்பான்; பின் இலன் - அவனை அன்றிப்பின்னால் எதுவும் எஞ்சி இருப்பது இல்லாதவன்; முன் இலன் - தனக்கு முன்னும் தானன்றி எதுவும் இல்லாதவன்; பேர்கிலன்- தனது நிலையிலிருந்து என்றும் பிறழாதவன்; தொல்நிலை - அப்பரமனுடைய தொன்மையான நிலை; ஒருவரால் துணியற் பாலதோ - இத்தகையதென ஒருவரால் அளவிட்டுக் கூறும் தரத்ததோ.

தன்னுள் இருந்து உலகையும், உயிரினங்களையும் தோன்றச் செய்கிறான். அவை, தனது விரிவிலே அடங்கி நிற்க - தான் அவைகளுக்குள்ளே எங்கும் நிறைந்து விளங்குகிறான். சரீர சரீரிபாவம் (உடல் உயிர்க் கொள்கை) என்ற வைணவக் கோட்பாடு இங்கு கூறப்பட்டுள்ளது. சித்து - அசித்துக்களாகிய அனைத்தையும் உடலாக உடையவன் அவற்றின் உயிராகத் திகழ்பவன் என்பதே உடலுயிர்க் கொள்கை என்பர்.

"தன்னுளே திரைத் தெழும்தரங்க வெண் தடங்கடல் தன்னுளே திரைத் தெழுந்தடங்குகின்ற தன்மைபோல் நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும் நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே"

(திருச்: 10) என்ற திருமழிசையாழ்வார் அருளிச் செயல் ஒப்பு நோக்கத்தக்கது. "பரமன், உலகைப் படைக்க வேறு காரணம் வேண்டாது தன்னிடமிருந்தே தோன்றச் செய்கிறான்” என்றதை 'தன்னுளே உலகங்கள் எவையும் தந்து' என்றார். உயிர்கள் வாழத் தான் இடமாய் நின்றும், அவ்வுயிர்களுக்குள் தான் அந்தர் யாமியாய்த் திகழ்பவன்' என்ற அரிய உண்மையைத் தெரிவிக்கிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bringing forth all the worlds within himself, standing within them
  2. while they stand within him, he dwells in them;
  3. he has no after, no before, the One; he does not move;
  4. can his ancient state be determined by anyone?

What the poem says

Pirakalātaṉ describes God as the source of the universe who contains all things and also lives within them, without beginning or end and never changing. The commentary links this to the Vaiṣṇava teaching that the world is God's body and he is its soul, and quotes Tirumaḻicai Āḻvār's image of waves rising and sinking back into the sea.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'taṉṉuḷē ulakaṅkaḷ evaiyum tantu avai
taṉṉuḷē niṉṟu tāṉ avaṟṟuḷ taṅkuvāṉ
piṉ ilaṉ muṉ ilaṉ oruvaṉ; pērkilaṉ;
tol nilai oruvarāl tuṇiyaṟpālatō?