கம்பராமாயணம் 6290 · யுத்த 3.60

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அருமறைச் சிரத்தின் - அரிய வேதங்களின் உச்சியிலே அமைந்த; சித்தெனத் தேறிய - மெய்ப்பொருள் எனத் தெளிந்துரைத்த; தத்துவம் அவன் - பரதத்துவமாக விளங்குபவன் அவன்; அது தம்மைத்தாம் உணர் வித்தகர் அறிகுவர் - அதனை, தங்களைத் தாங்கள் உணர்ந்த ஞானிகள் நன்கு அறிவார்கள்; வேறு வேறு உணர் பித்தரும் உளர் சிலர் - இவ்வாறன்றி வேறுவேறாக பிறழ உணரும் பித்தர்களும் சிலர் உள்ளனர்; வீடு பெற்றிலார் - ஞானிகளும் யோகிகளும் அடையத்தக்க வீடு பேறான பரமபதப்பேற்றைப் பெறாதவராவர்.

'அருமறை' என்னாது அரிய நெறியைக் கூறும் வேதம். 'சித்து' என்றது மெய்ப்பொருளான பரம் பொருளை. அருமறைச்சிரம் - வேதங்களின் உச்சி; வேதக் கருத்துகளை விளக்கும் உபநிடதம். பித்தர் - மயக்க உணர்வுடையோர். "மறையாய நால்வேதத்துள்நின்ற மலர்ச்சுடரே” என்ற திருவாய் மொழி (2313) ஒப்பு நோக்கத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He is the reality known as pure consciousness, made clear at the head of the rare Vedas;
  2. the wise who know themselves know that;
  3. there are some madmen too who see it as this and that;
  4. they have not attained release.

What the poem says

God is the conscious reality taught by the Upaniṣads, the "head" of the Vedas. Those who know their own true self know him; those who take a confused, divided view are mad and do not reach liberation.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'cittu eṉa aru maṟaic cirattiṉ tēṟiya
tattuvam avaṉ; atu tammait tām uṇar
vittakar aṟikuvar; vēṟu vēṟu uṇar
pittarum uḷar cilar; vīṭu peṟṟilār.