கம்பராமாயணம் 6291 · யுத்த 3.61

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'அளவையான் அளப்ப அரிது; அறிவின் அப்புறத்து
உளவை ஆய் உபநிடதங்கள் ஓதுவ;
கிளவியால் பொருள்களால் கிளக்குறாதவன்
களவை யார் அறிகுவார்? மெய்ம்மை கண்டிலார்.

பொருள் · Meaning in Tamil

து- (அந்தப் பரம் பொருளின் சிறப்பை பொருள்களை அளந்து துணிதற்குரிய எந்தப் பிரமாணங்களாலும் அளந்தறிய இயலாது; அறிவின் அப்புறத்து உளவை- அறிவால் உணர்ந்தறிய முடியாத படி உள்ளவைகளான வேதப் பொருள்களை; ஆய் உபநிடதங்கள் ஓதுவ- ஆய்ந்து துணிந்த உபநிடதங்கள் ஓயாதுரைக்கின்றன; கிளவியார் பொருள்களான்- சொல், பொருள் இவைகளின் துணை கொண்டு; கிளக்குறாதவன் - இத்தகையன் என்று கூறற்கியலாதவன்; களவையார் அறிகுவர் - மாயத்தை அறிபவர் யாருளர்? மெய்ம்மை கண்டிலர் - அவனது மெய்நிலையை எவரும் கண்டவர் இல்லை.

அளவை - பொருள்களை அளந்து துணிவதற்குரிய அடிப்படைப் பிரமாணங்கள். உளவை - உள்ளவரை. 'சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து' (திருக்குறள் - உரைப்பாயிரம்) எனப்பரிமேலழகரும், “மொழியைக் கடக்கும் பெரும்புகழான்" எனத் திருவரங்கத் தமுதனாரும் (இராமானுச நூற்றந்தாதி 7) கூறியவை ஒப்பு நோக்கத் தக்கன. களவு இங்கு மாயம். பரமனின் திறங்களை இக்காண்டத்தில், நாகபாசப் படலத்தில் கருடன் துதியாக வரும் பாடல்களில் (8252 8262) அற்புதமாகக் கம்பர் விளக்கியுள்ளார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He is hard to measure by any means of proof; the Upaniṣads, examining,
  2. speak of what lies beyond understanding;
  3. he cannot be expressed through words and their meanings;
  4. who can know his hidden play? None have seen the truth.

What the poem says

God cannot be measured by ordinary means of knowledge or captured in words. The Upaniṣads try to speak of what lies beyond the mind, but no one has fully seen his reality or the mystery of his ways. The commentary compares similar statements by Parimēlaḻakar and Tiruvaraṅkattamutaṉār.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'aḷavaiyāṉ aḷappa aritu; aṟiviṉ ap puṟattu
uḷavai ām upaniṭataṅkaḷ ōtuva;
kiḷavi ār poruḷkaḷāṉ kiḷakkuṟātavaṉ
kaḷavai yār aṟikuvār? meymmai kaṇṭilār.