கம்பராமாயணம் 6292 · யுத்த 3.62
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மூவகை உலகும் ஆம் - மேல், கீழ், இடை என்ற மூன்று வகையான உலகங்களும்தான் ஒருவனே ஆகி, குணங்கள் மூன்றும் ஆய் - சத்துவம், இராஜசம், தாமசம் என்னும் மூன்று வகையான குணங்களாகவும் ஆகி; யாவையும் எவரும் ஆய் - உலகப் பொருள்கள் எல்லாமும் எல்லோரும் தானே ஆகி; எண்ணில் வேறுபட்டு - எண்ணற்ற வேறுபாடுகளுடன் தோன்றியும்; ஓவலில் ஒரு நிலை ஒருவன் - நீங்குதலில்லாத ஒரே நிலையை உடைய ஒருவன் (இறைவன்); செய்வினை - செய்தருளும் செயல்கள்; தேவரும் முனிவரும் உணர- தேவர்களும், முனிவர்களும் உணருமாறு; தேயுமோ - அளவில் சுருங்கியதாய் விடுமோ? ஆகாது.
மூவகை உலகு - உலகிலுள்ள அவன், அவள் அது என்று சுட்டத்தகுந்த மூன்று வகையினதாகிய உயிரினங்கள் எனினுமாம். அந்த உயிரினங்களுக்குரிய சத்துவ குணம், ரஜோகுணம், தாமசகுணம். யாவையும் - சித்து, அசித்துப் பொருள்கள் எல்லாம். யாவரும் - எல்லோரும். எண்ணற்ற வேறுபாடுள்ளவன். அதே சமயத்தில் நீக்கமில்லாத ஒரே நிலையை உடையவன் என்பதை, "ஓவலில் ஒருநிலை ஒருவன்” என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Becoming the three kinds of worlds, becoming the three qualities,
- becoming all things and all persons, differing in countless ways,
- yet the One whose single state never ceases: his deeds,
- could they shrink to what the gods and sages can understand?
What the poem says
God becomes the three worlds, the three qualities of nature, sattva, rajas and tamas, and every thing and person, appearing in countless forms while remaining one and unchanging. His works are far too vast to be grasped even by gods and sages.