கம்பராமாயணம் 6293 · யுத்த 3.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சாங்கியம் - ஆராய்ச்சியால்வரும் ஞானம்; யோகம்- ஞானத்தை அனுபவமாகச் செயற்படுத்தும் நிலை; என்று இரண்டு தன்மைய - என்று கூறும் இரண்டு வகை நெறிகள்; வீங்கிய பொருள் எலாம் - நிறைந்துள்ள உலகப் பொருள்களை எல்லாம்; வேறு காண்பன - வேறு படுத்துப் பகுத்து உணர்த்துவனவாம்; ஆங்கு அவை உணர்ந்தவர்க்கன்றி - அவற்றை அறிந்தவர்க்கல்லாது; அன்னவன் ஓங்கிய மேல் நிலை - அப்பரமனது உயர்வற உயர்ந்த மேலான நிலை; உணரற்பாலதோ - உணர்ந்தறியும் தகைமையதோ?
மூலப்பகுதிமுதல் புருடன் வரை உள்ள தத்துவங்களின் இயல்பை விரித்துரைப்பது சாங்கிய நெறி. இயமம் முதலிய எண் வகைப் பயிற்சியை மேற்கொண்டு மனத்தை நெறி நிறுத்தி இறைவனை உணர்வது யோக நெறி. உலகப் பொருள்களையெல்லாம் பகுத்து உணர்த்தும் இவ்விருவகை நெறிகளையும் உணர்ந்தவர்களே இறைவனது மேலாம் நிலையை அறிவர்; பிறர் உணர்ந்தறியார் என்க. வீங்கிய - மிகுந்த, அன்னவன் - இறைவன். பாலதோ- ஓகாரம் எதிர்மறைப் பொருள்; உணரற் பாலதல்ல என்பது கருத்து. சாங்கியம், யோகம் என்ற இருவகை நெறிகளை அறிந்து உணர்ந்தவர்களே இறைவனது சிறந்த மேலாம் நிலையை உணரவல்லவர் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The two paths named Sāṅkhya and Yoga
- see all the teeming things of the world as distinct;
- except for those who know these, can his
- exalted highest state be understood?
What the poem says
Pirakalātaṉ names two classical schools: Sāṅkhya, which analyses the elements of existence from primal matter to the soul, and Yoga, which disciplines the mind to experience the divine. Only those who master these can grasp God's supreme state.