கம்பராமாயணம் 6294 · யுத்த 3.64
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கருமமும் - நல்வினை, தீவினை ஆகிய இருவகை வினைகளும்; கருமத்தின் பயனும் - அந்த வினைகளால் நேரும் பயனும்; கண்ணிய தரு முதல் தலைவனும் - விரும்பிய அப்பயன்களை உயிர்களுக்குத் தரும் முதற் பொருளும், தானும் - வினைசெய்யும் கருத்தாவாகிய உயிரும்; தான் - அனைத்தும் தானாக விளங்குபவன் இறைவனே; அவன் அருமையும் பெருமையும் - அவ்விறைவனது அருமை பெருமைகளை; அறிவரேல் அவர் - யார் அறிய வல்லவரோ, அவர்கள்; இருமை என்றுரை செயும் - இம்மை, மறுமைகளாகிய இருமை என்று நூல்கள் கூறும்; கடல் நின்று ஏறுவார் - பெருங்கடலைக் கடந்து கரை சேர்பவராவர்
'கருமமும் கரும் பலனுமாகிய காரணன்' என்பது திருவாய்மொழி (3:5:10) "செய்வினையும் செய்வானும் அதன் பலனும் கொடுப்பானும், மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள் எனக் கொண்டே இவ்வியல்பு சைவநெறி" என்ற பெரிய புராணம் பாடல் (3645) ஒப்பிடத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Action, the fruit of action, the first Lord
- who grants what is wished, and the doer himself: all these is he;
- if they know his rareness and greatness, they
- will climb out of the sea called the two lives.
What the poem says
God is the deed, its result, the giver of that result and even the soul who acts. Whoever knows his greatness will cross the ocean of this life and the next, that is, be freed from rebirth. The commentary cites similar statements in Nammāḻvār's Tiruvāymoḻi and the Periya Purāṇam.