கம்பராமாயணம் 6296 · யுத்த 3.66

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'முற்பயப் பயன் தரும் முன்னி நின்று அவர்
பிற்பயப் பயன் தரும் பின்பு போய் அவன்;
தன் பயன் தான் தரும் தருமம் இல்லை; அஃது
அற்புத மாயையால் அறிகிலார் பிறர்.

பொருள் · Meaning in Tamil

முற்பயப் பயன்தரும் - (அப்பரமன்) முன்னே அனுபவிப்பதற்குரிய முதிர்ந்த வினைப்பயனை முன்னின்று உதவுவான்; முன்னில் நின்று - ஆசிரிதர்களான அடியவர்க்கு முன் நின்று; அவர் பிற்பயப் பயன் தரும் - அவர்கள் பின்னே நுகர்தற்குரிய முதிராத வினைப் பயன்களை பின்னர் உதவுவான்; பின்பு போல் அவன் - பின்னே இருப்பது போலிருந்து அப்பரமனுதவும்; தற்பயன்தான் தெரி - தனது பயனைத் தானே தெரிந்து தரவல்ல; தருமம் இல்லை - கருமம் எதுவுமில்லை; அஃது அற்புதமாயையால் - அதனை அவனது அற்புத மாயையாலே; அறிகிலார் பலர் - பலர் அறிய முடியாதவராவர்.

உயிர்கள் அனுபவிப்பதற்குரிய முற்பயனை முன்னும், பிற்பயனைப் பின்னும் துய்க்கச் செய்பவன் இறைவன் ஒருவனே. சடப் பொருளான வினை தானே பயன்தர வல்லதல்ல என்றான். செய்வினைப் பயன் தானே பயன் தரும். அதைச் செய்ய ஒரு தெய்வம் வேண்டியதில்லை. என்று கூறிய இரணியன் உரையை மறுத்துப் பிரகலாதன் கூறுவதிதுவென்க. தருமம்- செயல் (கருமம்)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The fruit ripe for now he gives in front, standing before them;
  2. the fruit to come later he gives as if standing behind;
  3. no deed knows and gives its own fruit; that,
  4. through his wondrous māyā, many do not understand.

What the poem says

Iraṇiyaṉ had said deeds bear fruit by themselves. Pirakalātaṉ answers that a deed is inert and cannot deliver its own result. God dispenses the ripe results now and the unripe ones later. His mysterious power, māyā, hides this, so many people miss it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'muṟpayap payaṉ tarum muṉṉil niṉṟavar
piṟpayap payaṉ tarum piṉpu pōl avaṉ;
taṟ payaṉ tāṉ teri tarumam illai; aḵtu
aṟputa māyaiyāl aṟikilār palar.