கம்பராமாயணம் 6297 · யுத்த 3.67
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இருவினை என்பவை - உயிர்கள் செய்த நல்வினையும் தீவினையும் ஆகிய இருவகை வினைகள் என்பவை; இயற்றி இட்டவை - உயிர்கள் செய்து வைத்தனவாகும்; (அவற்றுள்) ஒரு வினை ஒரு பயன் அன்றி - ஒரு வினை ஒரு பயனைத் தருவதல்லது; உய்க்குமோ - வேறு பயன்களைத் தரவல்லவையோ; கருதின கருதின காட்டுகின்றது - அடியார்கள் விரும்பிய விரும்பிய பலன்களைத் தரவல்லது; தருபரன் அருள்- எல்லாம் தரவல்ல இறைவன் திருவருளே; இனிச் சான்று வேண்டுமோ - இனி இதற்கு வேறு சாட்சியும் வேண்டுமோ?
'வேள்வியும் தவமுமாகிய நல்வினை இயற்றி உலக முதல்வனாக இருக்கிறேன்' என்று கூறிய இரணியனுக்கு, செய்யும் நல்வினையோ தீவினையோ தாமே பயன்தரவல்லன அல்ல. அவை உயிரற்ற சடப் பொருள்தானே எவ்வாறு பலன் தரும்; அடியார் கருதிய அத்தனைப் பயன்களையும் தரவல்லது இறைவன் திருவருளே என்றுணர்க என்றான் பிரகலாதன். உய்க்குமோ - செலுத்துமோ
ஆங்கிலம் · English translationAI
Translation
- Can one deed bring anything but its one fruit?
- The two kinds of deeds are things done and laid aside;
- what shows each and every thing that is wished for
- is the grace of the giving Supreme; what further proof is needed?
What the poem says
Good and bad deeds are lifeless things, each tied to a single result. Only God's grace can give devotees whatever they long for. This answers Iraṇiyaṉ's boast that his own merit made him lord of the world.