கம்பராமாயணம் 6298 · யுத்த 3.68

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'ஒர் ஆவுதி கடைமுறை வேள்வி ஓம்புவோர்
அரா அணை அமலனுக்கு அளிப்பிரேல் அது
சராசரம் அனைத்தினும் சாரும் என்பது
பராவ அரும் மறைப் பொருள்; பயனும் அன்னதால்.

பொருள் · Meaning in Tamil

வேள்வி ஓம்புவார் கடைமுறை - வேத வேள்விகளைச் செய்து முடிப்பவர்கள் வேள்வியின் முடிவில், ஒரு ஆவுதி- ஓர்அவியுணவினை; அராஅணை - பாம்பணையில் அறிதுயில் அமர்ந்திருக்கும்; அமலனுக்கு அளிப்பரேல் - திருமாலுக்குப் படைப்பாராயின்; அது சராசரம் அனைத்திலும் சாரும் - அந்த அவியுணவு உலகில் உள்ள சரம், அசரம் ஆகிய எல்லாவற்றையும் அடையும்; என்பது பராவ அரும்மறைப் பொருள் - என்பது பரவுதற்கு அரிய பெருமைமிக்க வேதங்கள் கூறும் பொருளாகும்; பயனும் அன்னதால் - அவியுணவே அல்லாது அந்த வேள்வியின் பயனும் அத்தன்மைத்தே யாகும்.

அமலன் - குற்றமற்றவன். "வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும் ஆதியும் ஆனான்” என்ற பெரியதிருமொழி (நாலாயிர. 1786) ஒப்பு நோக்கத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If those who tend the sacrifice, at its close,
  2. give one oblation to the Spotless One who lies on the serpent,
  3. it reaches all things moving and unmoving: this
  4. is the meaning of the Veda, too great for praise; and so too its fruit.

What the poem says

A single offering made to Viṣṇu, who rests on the serpent Ādiśeṣa, reaches every creature, because he is the inner self of all. The merit of such a sacrifice spreads in the same way. The commentary cites a verse of Tirumaṅkai Āḻvār calling God the sacrifice and the Veda.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'ōr āvuti kaṭaimuṟai vēḷvi ōmpuvār
arā aṇai amalaṉukku aḷipparēl atu
carācaram aṉaittiṉum cārum eṉpatu
parāva aru maṟaip poruḷ; payaṉum aṉṉatāl.