கம்பராமாயணம் 630 · பால 10.78
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மீது - வானில்; மொய்த்து எழு - நெருங்கி எழுகின்ற; நிலவின் கதிர் - வெண்ணிலாவின் கதிர்களாகிய; மோது மத்திகை - அடிக்கும் சம்மட்டி; மென்முலை மேல் பட - தன் மெல்லிய தனங்கள் மேல் படுதலால்; ஓதிமப் பெடை - (சீதை) பெண் அன்னம்; வெம்கனல் உற்றென - கொடிய நெருப்பிலே அகப்பட்டதுபோல; போது மொய்த்த - தாமரை மலர்கள் நிறைந்த; அமளி புரண்டாள் - படுக்கையில் விழுந்து புரண்டாள்.
சந்திரனைச் சம்மட்டி என்றதால் மென்முலை அதை எறிதற்குரிய பட்டடை ஆயிற்று. போது மொய்த்த அமளி அவளுக்குத் தீ பரப்பிய குண்டமாயிற்று. தற்குறிப்பேற்றவணி. தாமரை மலர்ப் படுக்கையில் சீதை புரண்டதற்கு ஒப்புமை அமையப் பெடையன்னம் நெருப்பிலே பொருந்தியது போலும் என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the hammer-blows of the white moonbeams crowding and rising above
- fell upon her soft breasts,
- like a female swan that has fallen into fierce fire,
- she tossed on her bed heaped with flowers.
What the poem says
The moonlight pours down on Cītai like blows from a smith's hammer striking her breast as if on an anvil. She writhes on her bed of lotus petals like a swan that has fallen into a fire pit.
The bed of flowers meant to cool her becomes a blazing hearth. The comparison of Cītai to a female swan is apt, since swans are associated with lotuses.