கம்பராமாயணம் 6300 · யுத்த 3.70
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எழுத்து இயல் நாளத்தின் - ஓவியத்தின் தன்மைவாய்ந்த அழகிய தண்டினையும்; விழுத்தனிப்பல் இதழ் - மேலான சிறந்த பல இதழ்களையும்; விரை உலாம் முகிழ் - உடைய திருமாலின் நாபியில் தோன்றிய மணம் கமழும் தாமரை மலரின்; முழுத்தனி நான்முகன் முதல - ஒப்பற்ற பிரமன் முதலாகிய; எண்ணிலாவகை முற்றுயிர் - எண்ணற்ற உயிரினம் முழுதும்; வழுத்து அரும் பொகுட்டது ஓர்புரையின் வைகுமால் - போற்றுதற்கரிய பொகுட்டிலே ஒரு பகுதியிலே வாழ்வதாகும்.
நாளம் - உள்தொளை உடைய தண்டு. எழுத்து இயல் - ஓவியத் தன்மை. முழுத்தனி - முழுதும் தனித்தன்மை உள்ள.
"பந்திக் கமலத் தடஞ்சூழ் அரங்கர் படைப்பழிப்புச் சிந்தித் திடுவதும் இல்லைகண்டீர் அத்திசைமுகனோ(டு) உந்திக் கமலம் விரிந்தால் விரியும் உகக்கடையில் முந்திக் குவியில் உடனே குவியுமிம் மூதண்டமே”
என்ற திருவரங்கத்து மாலை (19) இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On the stalk shaped as in a painting, beyond counting,
- all beings, from the one matchless four-faced god onward,
- dwell in one small part of the seed-pod beyond praise
- of that single, splendid, many-petalled fragrant bud.
What the poem says
The image is of the lotus that grows from Viṣṇu's navel. Brahmā sits on it, and all creatures live within one tiny part of its centre. The commentary quotes a later Vaiṣṇava poem saying the universe opens and closes with that lotus.