கம்பராமாயணம் 6301 · யுத்த 3.71

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'கண்ணினும் கரந்து உளன்; கண்டு காட்டுவான்;
உள் நிறைந்திடும் உணர்வு ஆகி உண்மையான்;
மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும்
எண்ணினும் நெடியவன்; ஒருவன்; எண் இலான்

பொருள் · Meaning in Tamil

கண்ணினும் கரந்துளன் - இறைவன் கண்ணுக்குள்ளும் (அதனால் காண முடியாதபடி) மறைந்திருக்கிறான்; கண்டு காட்டுவார் - தத்துவ உண்மைகளைத் தாமும் அறிந்து பிறருக்கும் கூறவல்ல மேலோர்களின்; உள் நிறைந்திடும் உணர்வாகி உண்மையால் - உள்ளத்தில் நிறைந்திருக்கும் மெய்ஞ்ஞான உணர்வாகி அவர்கள் உள்ளத்தே வாழ்ந்திருப்பதால், மண்ணினும் - நிலத்திலே (அதன் பரப்பளவு பரந்திருந்தும்); வானினும் - வானத்திலே (அதன் உயர்வளவு உயர்ந்திருந்தும்), மற்றை மூன்றினும் - மற்றுள்ள நீர் தீ, காற்று என்பவைகளில் அவற்றிற்குரிய குணங்களாய் நிறைந்தும், எண்ணினும் நெடியவன் - நினைப்பவர் நினைப்பிலும் நெடியவனான; ஒருவன் எண்ணிலான் - ஒப்பற்ற ஒருவன், எண்ணற்றவடிவினனாக விளங்குகிறான்.

கரந்து - மறைந்து. "கரந்து எங்கும் பரந்துளன்” என்பது ம. (1:1:10) உள் நிறைந்திடும் உணர்வு - உள்ளத்தே நிறைந்திருக்கும் ஞான உணர்வு. "உள்குவார் உள்ளிற்றெல்லாம் உடன் இருந்து அறிதி” என்பது அப்பர் தேவாரம் (1189:3). "பூநிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய் தீநிலாய மூன்றுமாய் தெளிந்த காலிரண்டதாய் மீநிலாய தொன்றுமாகி வேறு வேறுதன்மையாய், நீநிலாய வண்ணம் நின்னையாவர் காணவல்லரே” என்ற திருச்சந்த விருத்தம் (7) காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He hides even in the eye; through the awareness that fills within
  2. those who see and show him, he is truly there;
  3. in the earth, in the sky and in the other three,
  4. he is greater than thought; he is One, and countless.

What the poem says

God is hidden even inside the eye that tries to see him, yet he is present as the inner wisdom of seers. He pervades earth, sky, water, fire and air, is larger than any thought, and is both one and infinitely many. The commentary cites Nammāḻvār, Appar and Tirumaḻicai Āḻvār.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'kaṇṇiṉum karantuḷaṉ; kaṇṭu kāṭṭuvār;
uḷ niṟaintiṭum uṇarvu āti uṇmaiyāl;
maṇṇiṉum vāṉiṉum maṟṟai mūṉṟiṉum
eṇṇiṉum neṭiyavaṉ; oruvaṉ; eṇ ilāṉ