கம்பராமாயணம் 6302 · யுத்த 3.72

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சிந்தையின், செய்கையின், சொல்லின் சேர்ந்துளன் - உயிர்களின் எண்ணத்திலும் செய்யும் செயல்களிலும் பேசும் பேச்சிலும் இறைவன் சேர்ந்து உறைபவனாவான்; இந்தியம்தொறும் உளன் - இந்திரியங்கள் தோறும் இருக்கிறான்; உற்றது எண்ணினால்- (அவன் எங்கும் நிறைந்திருக்கும்) இயல்பை எண்ணிப் பார்த்தால்; முந்தை ஓர் எழுத்தென வந்து - முன்பு ஒரு எழுத்தாகத் தோன்றி; மும்முறைச் சந்தியும் -அ,உ,ம என்னும் மூன்றெழுத்துக்களும்; பதமுமாய்த்தழைத்ததன்மையான் - நான்கு பதங்களுமாய் தழைத்த தன்மையன் ஆவான்.

இந்தியம், இந்திரியம் என்பதன் திரிபு. ஐந்து இந்திரியங்கள். மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள். முந்தை ஓர் எழுத்து - 'ஓம்' என்னும் பிரணவம். அ,உ,ம் என்ற மூன்றும் சேர்ந்ததே 'ஓம்' இதனைக் கூட்டெழுத்து என்பார். பதம் - ஓம் நமோ நாராயணாய என்பதாம்; பிரணவத்தின் விரிவே எட்டெழுத்து மந்திரம். "எட்டிழையும் மூன்று சரடுமாம் மங்கல சூத்திரம் போலே எட்டெழுத்தும், மூன்று பதங்களுமாயிருப்பது திருமந்திரம்” என்பர் மேலோர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He is joined with thought, with deed and with word;
  2. he is in every sense; if you consider what he is,
  3. he came as the one first syllable and, joined in threefold union,
  4. he flourished as the words of the mantra.

What the poem says

God is present in all thinking, acting and speaking, and in every sense organ. He appears first as the syllable Om, made of the three sounds a, u and m, and then expands into the words of the eight-syllable mantra. The commentary likens it to a wedding thread of eight strands and three cords.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'cintaiyiṉ ceykaiyiṉ colliṉ cērntuḷaṉ;
intiyamtoṟum uḷaṉ; uṟṟatu eṇṇiṉāl
muntai ōr eḻuttu eṉa vantu mum muṟaic
cantiyum patamumāyt taḻaitta taṉmaiyāṉ.