கம்பராமாயணம் 6303 · யுத்த 3.73

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காமமும் வெகுளியும் முதல - காமம், கோபம் முதலாகிய; கண்ணிய தீமையும் வன்மையும் - மனம்கருதிய தீமைகளையும் கொடுஞ்செயல்களையும்; தீர்க்கும் செய்கையான் - அறவே தீர்க்கும் செய்கை உடைய அப்பரமனுடைய; நாமமும் - திருநாமத்தின் சிறப்பும்; அவன் பிற நலி கொடா- பிற உயிர் நலிதல் செய்யாதபடி, நெடும் சேமமும் - உயிர்களை நிலையாகக் காக்கும் சேமமும்; பிறர்களால் செப்பற் பாலவோ - அவனது திருவருளைப் பெறாத மற்றவர்களால் கூறத்தக்கதாமோ?

காமம், வெகுளி, மயக்கம் இவை மூன்றும் மனத்துக்குத் தீமை பயப்பனவாம். வன்மை - வன்செயல். நலி கொடா - நலியாதவாறு. நெடுஞ்சேமம் - நிலைத்த பாதுகாப்பு. "காமம், வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்” (360) என்பது குறள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Of the One whose work it is to remove the evil and violence
  2. that desire, anger and the rest intend,
  3. his name and the lasting protection that lets no other harm us:
  4. can they be spoken of by others?

What the poem says

God's name destroys lust, anger and the cruelty they breed, and his protection keeps beings safe from harm. Only those blessed by his grace can describe these things. The commentary quotes the Tirukkuṟaḷ saying that suffering ends when desire, anger and delusion are destroyed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'kāmamum vekuḷiyum mutala kaṇṇiya
tīmaiyum vaṉmaiyum tīrkkum ceykaiyāṉ
nāmamum avaṉ piṟa nali koṭā neṭuñ
cēmamum piṟarkaḷāl ceppaṟpālavō?