கம்பராமாயணம் 6304 · யுத்த 3.74

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆலமும் வித்தும் ஒத்து - பெரியதொரு ஆலமரமும் அதன் விதையும் போல; அடங்கும் ஆண்மையான் - உலகமனைத்தும் தன்னுள் அடங்கியிருக்கும் படியான பேராண்மையுள்ளவன்; காலமும் கருவியும் இடனுமாம்- தொழிலைச் செய்தற்குரிய காலம் கருவி, களன் மூன்றுமாகி; கடைப்பால் அமை பயனுமாய் - தொழிலின் நிறைவில் அமையும் பயனுமாய்; பயன் துய்ப்பானுமாய் - அந்தப் பயனை அனுபவிப்பவனுமாய்; சீலமும் அவைதரும் திருவுமாய் உளன் - நல்லொழுக்கமும், அந்த ஒழுக்கத்தால் எய்தும் செல்வமுமாய் இருப்பவன் அப்பரமனே.

கடைப்பால் - இறுதியில். திரு - செல்வம். "ஆலமர் வித்தின் அருங்குறள் ஆனான்" என முன்னும் (413) கூறியுள்ளது கருதுக. அங்குக் குறிக்கப்பட்டது வாமன அவதாரத்தை; எனினும், அதே தொடர் பரம்பொருள் இலக்கணமும் ஆகின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He is time, instrument and place, he is the fruit
  2. that comes at the end, he is also the one who enjoys the fruit,
  3. he is virtue and the wealth it brings; he is
  4. of the power that holds all within, as the banyan lies within its seed.

What the poem says

God is every part of action: when, with what and where it is done, its result, and the one who enjoys it. He is also virtue and the prosperity it brings. The whole universe lies folded within him as a great banyan tree lies within its tiny seed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'kālamum karuviyum iṭaṉum āy kaṭaip
pāl amai payaṉum āy payaṉ tuyppāṉum āy
cīlamum avai tarum tiruvum āy uḷaṉ
ālamum vittum ottu aṭaṅkum āṇmaiyāṉ.