கம்பராமாயணம் 6305 · யுத்த 3.75
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உள்ளுற - (இசையில் வல்லவர்களின்) உள்ளத்திலே பொருந்திய; உணர்வு இனிது உணர்ந்த ஓசை - இசையுணர்வால் இனிதே உணரப் பட்ட ஓசையானது; தெள்விளியாழிடை - தெளிந்த இசைக்கு இடமாகிய யாழின் இடையிலே; தெரியும் செய்கையின் - வெளிப்படும் காரியத்தைப் போல; உள் உளன் புறத்துளன் - எல்லா உயிர்களிலும் உள்ளும், புறமும் உள்ளவனாவான்; ஒன்றும் நண்ணலான் - எனினும் அவைகளின் தன்மை தன்னை அடையாத தூய்மை உடையவன்; தள்ள அரும் மறைகளும் - ஒதுக்க இயலாத வேதங்களும் கூட; மருளும் தன்மையான் - அவனது தன்மையைக் கூறுவதற்குத் தடுமாறும் தன்மை உடையவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like a sound well grasped within by the feeling of the musician,
- made manifest through the clear-toned lute,
- he is inside, he is outside; nothing touches him;
- he is such that even the Vedas, which none can set aside, are bewildered.
What the poem says
As music exists in the musician's mind and becomes audible through the lute, God dwells both within and outside all beings while remaining untouched by their flaws. Even the Vedas cannot describe him.