கம்பராமாயணம் 6307 · யுத்த 3.77
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காலையின் - (மலரும்) காலத்தே; நறுமலர் - மலர்ந்த மணமிக்க மலர்கள்; ஒன்றக் கட்டிய - நெருங்கிப் பொருந்துமாறு கட்டப்பட்ட; மாலையின் மலர்புரை சமய வாதியர் - மாலையில் உள்ள பல மலர்களை ஒத்துச் சமயம் பற்றி வாதம் செய்பவர்களின்; சூலையின் திருக்கலால்- மனஎரிவு காரணமான மாறுபாடு அல்லாமல்; சொல்லுவோர்க்கு எலாம் - அவன்தன்மை உணர்ந்து கூறும் ஞானிகளுக்கு எல்லாம்; வேலையும் திரையும்போல் -கடலும் அதனுள் எழுந்து அடங்கும் அலைகளும் போல; வேறுபாடிலான் - வேறுபாடில்லாதவனாவான்.
மாலையில் கட்டப்பட்ட மலர்கள் வேறு வேறு நிறம், மணம் உடையனவாயினும், மாலைக்கு அழகூட்டும் ஒருதன்மையில் ஒத்திருப்பனபோல, சமயங்கள் புறத்தோற்றத்தில் பல்வேறு வாதங்களால் வேறுபட்டாலும் அவை கூறும் நெறி-நிலை ஒன்றே. சமயம் என்பது பரம்பொருளை உணர்ந்து அனுபவத்தில் கரைய வைப்பதேயன்றி, வாத, ஆரவாரங்களுக்கு உரியது அன்று. அனுபவ ஞானிகள் பூசல் இடார். உண்மையை உணர்ந்தவர்கள் கடலும் அலையும் போல இறைவன் வேறுபாடற்றவன் என்பதை உணர்வர் என்பதனை "தன்னுளே திரைத்தெழும்தரங்க வெண் தடங்கடல், தன்னுளே திரைத்தெழுந்தடங்குகின்ற தன்மைபோல்" என்ற திருச்சந்த விருத்தத்தால் அறியலாம். (திவ்யப். 70.) ஆறுதல்- கடைதல். சூலை - சூல் என்ற பகுதி ஐ என்ற பெயர் விகுதி பெற்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Apart from the quarrels of sect-debaters, burning in their hearts,
- who are like the flowers strung in a garland
- with fresh morning blossoms tied closely together, to all who truly speak of him
- he is without difference, like the sea and its waves.
What the poem says
The verse addresses religious disagreement. Rival schools are like different flowers in one garland: they differ in colour and scent but serve one purpose. Apart from the heat of argument, those who truly know God see him as no more divided than the sea is from its waves. The commentary again quotes Tirumaḻicai Āḻvār's image of the waves.