கம்பராமாயணம் 6308 · யுத்த 3.78
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இன்னது ஓர் தன்மையன் - இத்தகைய பேரியல்புவாய்ந்த இறைவனை; இகழ்வுற்று - (அவன் பெருமை வலிமைகளை எண்ணாது) இகழ்ந்துபேசி; எய்திய நல்நெடும் செல்வமும் - தவபலத்தால் அடைந்துள்ள நன்மை தரும் நிறைந்த செல்வத்தையும்; நாளும் - பெற்றுள்ள வாழ் நாளையும்; நாம் அற - உனக்குள்ள நற்பெயருடனே இழந்து; மன்உயிர் இழத்தி - நிலைத்த உயிரை இழக்கப் போகிறாயே என்று; அஞ்சி - நான் பெரிதும் பயந்து; சொன்னவன் நாமம் வாழ்த்தினேன் - இதுவரை கூறிய அப்பரமனது திருநாமத்தை வாழ்த்தலானேன்; என்று உணரச் சொல்லினான் - என்று இரணியன் உணருமாறு பிரகலாதன் கூறினான்.
நா(ம)ம் அற-பெயரும் அழியும்படி நாமம் என்ற சொல் நாம் என விகாரமாயிற்று. சொன்னவன் - என்னால் விவரித்துச் சொல்லப்பட்ட பரமன் நாமம். உணரும் வகையில் பிரகலாதன் சொல்லியும் இரணியன் உணரவில்லையே என்பது இரக்கத்துக்குரியது; அவ்வளவு ஆணவம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Fearing that by scorning One of such a nature,
- you would lose the great wealth you have won, your days and your name,
- and your lasting life itself, I have praised
- the name of the One I spoke of. So he spoke, so that his father might understand.
What the poem says
Pirakalātaṉ ends his long sermon with the reason for it: love for his father. He fears that by insulting God, Iraṇiyaṉ will lose his kingdom, his long life, his good name and finally his life. The commentary notes the pity of it: the son made everything clear, but his father's pride kept him from understanding.