கம்பராமாயணம் 6309 · யுத்த 3.79
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எதிரில் நின்று - தனக்கு எதிரிலே நின்றுகொண்டு; இவைஇவை உரைத்திடுதலும் - பிரகலாதன் இவைகளைக் கூறவும்; எவ்வுலகமும் அஞ்ச - என்ன நேருமோ என, எல்லா உலகத்தவரும் பயப்பட; முதிரும் வெம் கத மொழி கொடு - முதிர்ந்த கொடிய கோபம் உரையோடு; முதுகடற் கடு ஏய்ப்ப மூண்டது - பழமையான கடலின்கண் தோன்றிய ஆலகால விடத்தை ஒப்ப மூண்டது; கதிரும் வானமும் சுழன்றன - சூரியனும் வானமும் சுழலலாயிற்று; நெடுநிலம் கம்பித்த - பரந்த நிலம் முழுதும் நடுங்கலாயின; கனகன்கண் உதிரம் கான்றன - இரணியனது கண்கள் இரத்தம் சொரிந்தன; புகைக் கொடி தோன்றின - கோபத்தால் சிவந்த கண்களில் புகைப்படலம் தோன்றியது; கொடுந்தீ உமிழ்ந்தது - கண்கள் கொடிய தீயைக் கக்கின;
பிரகலாதன் கூறியவற்றைக் கேட்ட இரணியன் மிகுந்த சினம் கொண்டான். அவனுக்கு எதிரில் நின்று அஞ்சாது கூறிய மொழிகளால் இரணியன்பால் தோன்றிய மெய்ப்பாடுகள் இச்செய்யுளில் கூறப்பட்டன. கொடுந்தீயே என்பதில் ஏகாரம் அசைநிலை. வெம்கதம் - கொடிய கோபம். கம்பித்த - நடுங்கின. புகைக்கொடி - புகைப் படலம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he stood before him and said all this, while every world trembled,
- his rage rose with ripe, fierce words of wrath, like the poison of the ancient sea;
- the sun and the sky spun round; the wide earth shook; Kaṉakaṉ's eyes
- poured blood; wreaths of smoke appeared; and they spat out cruel fire.
What the poem says
Iraṇiyaṉ explodes in fury, compared to the deadly poison that rose when the ocean was churned. The cosmos reacts to his anger: the sun and sky whirl and the earth quakes. His eyes run red, smoke and then fire blaze from them.