கம்பராமாயணம் 6311 · யுத்த 3.81
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உயிரொடும் தின்று தீர்குதும் என்குநர் - இவனை உயிரோடு தின்று தீர்ப்போம் என்று கூறுபவர்களும்; உரும் எனத் தெழிக்குநர் - இடியோசை போலப் பெருங்குரல் எடுத்து அதட்டுபவர்களும், சினவேழக்கன்று புல்லிய - சினம் மிக்க யானைக் கன்று ஒன்றைப் பற்றிக் கொண்ட; கோள் அரிக் குழு என - கொல்லவல்ல சிங்கக் கூட்டம் போல; கனல்கின்ற தறுகண்ணார் - கோபத்தால் பொங்கும் கொடியவர்களும் ஆனவீரர்கள்; குன்று போல் மணிவாயிலின் - குன்றைப் போன்ற அழகிய அரண்மனை வாயிலுக்கு; பெரும்புறத்து உய்த்தனர் - அப்புறத்தே பிரகலாதனைக் கொண்டு சென்றனர்; மழு கூர்வாள் - மழுக்களும் கூரிய வாள்களும் ஆக; ஒன்று போல்வன ஆயிரம் - ஒன்றைப் போன்ற ஆயிரம் ஆயுதங்களை; மீதெடுத்து ஓச்சினர்- எடுத்துப் பிரகலாதன் மேல் வீசினார்கள்.
தீர்குதும் - தீர்ப்போம். என்குநர்- என்போர். உரும்- இடி. வேழம். தெழித்தல் - அதட்டுதல். அரிக்குழு - சிங்கக் கூட்டம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They took him outside the great hill-like jewelled gate; axes and sharp swords,
- a thousand all alike, they raised and swung down on him; saying,
- We will eat him up alive, roaring like thunder,
- they blazed, fierce ones like a pride of lions that have seized an angry elephant calf.
What the poem says
The executioners drag Pirakalātaṉ outside the palace gate, threatening to devour him alive and roaring like thunder. Like a pride of lions on an elephant calf, they bring down a thousand axes and swords on him.