கம்பராமாயணம் 6312 · யுத்த 3.82
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மன்னுயிர்க்குத் தாயின் அன்பினன்தன்னை - உலகத்து உயிரினங்களுக்கெல்லாம் தாயைப் போன்ற அன்புடைய பிரகலாதனை; அத்தவம் எனும் தகவு இல்லோர் - தவம் என்னும் பெரும் தகைமை இல்லாத அந்த வீரர்கள்; 'ஏ' என் மாத்திரத்து - 'ஏ' எனக் கூறும் நேரத்திற்குள்; எய்தன எறிந்தன - எய்த அம்புகளும், எறிந்த வேல், மழு போன்றவைகளும்; எறிதொறும் எறிதோறும் - பலமுறையும் எறியும் போதெல்லாம்; தூயவன்தனை - தூய்மை வடிவான எம்பெருமானையே, துணை என உடைய அவ்வொருவனை - துணையாக உடைய அந்த ஒப்பற்ற ஒருவனான பிரகலாதனை; அத்துணை மழுவொடு கொலைவாளும் - வீரர்கள் எறிந்த அத்தனை மழுக்களும், வாட்களும்; துன்னாதார் வாயில் வைதன ஒத்தன - பகைவர்கள் வாயால் வைது கூறிய வசைச் சொற்களை ஒத்து எந்தத் தீமையும் செய்யாதனவாயின.
தூயவன் - பரமன். துன்னாதார் - பகைவர். தகவு - தகைமை (மேன்மை). ஒருவன் - ஒப்பில்லாதவன். 'தாயினும் அன்பன்' என இறைவனைக் கூறுவர் மேலோர்: இங்குக் கம்பர் பிரகலாதனைக் குறிப்பிடுவது அவன் பெருமையைக் காட்டும். 'தாயின் நல்லான்' என்று இலக்குவன் குகனைக் கூறியது (1964) நினைக. பகவானுக்கு உரிய இயல்பு பாகவதனுக்கு ஆயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On him who loved all living beings more than a mother, those who had no worth of penance,
- in the time it takes to say Ah, shot and hurled; each time they hurled, and each time,
- against that one who had the Pure One for his companion, all those axes
- and killing swords were like the curses that enemies mouth.
What the poem says
Weapons rain on Pirakalātaṉ, but because God protects him they do him no more harm than an enemy's insults. The commentary notes that the poet gives the boy a quality usually given to God, love greater than a mother's, so the devotee comes to share the Lord's nature.